சமாரியம்(II) புரோமைடு
சமாரியம்(II) புரோமைடு (Samarium(II) bromide) என்பது SmBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[6] பழுப்பு நிறத் திடப்பொருளாகக் காணப்படும் இச்சேர்மம் பெரும்பாலான கரைப்பான்களில் கரையாது. ஆனால் காற்றில் உடனடியாக சிதைவடைகிறது.[4] கட்டமைப்புவாயு நிலையில் உள்ள சமாரியம்(II) புரோமைடில் Sm–Br பிணைப்பின் பிணைப்பு தூரம் 274.5 பைக்கோமீட்டர் ஆகவும் பிணைப்பு கோணம் 131±6° கொண்ட ஒரு வளைந்த மூலக்கூறாகவும் காணப்படுகிறது.[7] வரலாறுசமாரியம்(II) புரோமைடை முதன்முதலில் 1934 ஆம் ஆண்டு பி. டபிள்யூ. செல்வுட்டு என்பவர் சமாரியம் முப்புரோமைடுடன் (SmBr3) ஐதரசன் (H2) வாயுவைச் சேர்த்து குறைத்தல் வினையின் மூலம் தயாரித்தார். சமாரியம்(III) ஆக்சைடை (Sm2O3) சமாரியம் முப்புரோமைடாக மாற்றி பின்னர் டெட்ரா ஐதரோ பியூரானிலுள்ள இலித்தியம் சிதறலுடன் சேர்த்து குறைப்பதன் மூலமும் ககனும் இதைத் தயாரித்தார். இராபர்ட்டு ஏ. பிளவர்சு டெட்ரா ஐதரோ பியூரானிலுள்ள சமாரியம் டையோடைடுடன் (SmI2) இரண்டு சமான இலித்தியம் புரோமைடை (LiBr) சேர்த்து வினைபுரியச் செய்து இதைத் தயாரித்தார். டெட்ராபுரோமோயீத்தேன் (C2H2Br4) சேர்மத்தை சமாரியம் உலோகத்துடன் கலப்பதன் மூலம் நாமி என்பவர் சமாரியம்(II) புரோமைடை தயாரித்தார். மேலும் இதே வினையில் டெட்ராப்ரோமோயீத்தேன் அல்லது சமாரியத்தை சூடாக்குவது சமாரியம்(II) புரோமைடின் உற்பத்தியை பெரிதும் மேம்படுத்துவதாக இல்மர்சன் என்பவர் கண்டறிந்தார்.[8] வினைகள்சமாரியம்(II) புரோமைடு, பொதுவாகப் பயன்படுத்தப்படும் சமாரியம் ஈரயோடைடை நினைவூட்டும் வகையிலான குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.[9] ஆல்டிகைடுகள், கீட்டோன்கள் மற்றும் குறுக்கு-இணைப்பு கார்போனைல் சேர்மங்களின் பினாக்கோல் தற்பிணைப்பு வினைகளுக்கு சமாரியம்(II) புரோமைடு பயனுள்ளதாகும். சமாரியம்(II) புரோமைடு ஓர் ஆல்கைல் ஆலைடின் முன்னிலையில் இருந்தால், கீட்டோன்களைத் தேர்ந்தெடுத்து குறைக்கும் திறன் கொண்டது என்று அறிக்கைகள் காட்டுகின்றன.[8] சமாரியம்(II) புரோமைடு அறுமெத்தில்பாசுப்போரமைடுடன் சேர்ந்து கரையக்கூடிய கூட்டுப் பொருட்களை உருவாக்குகிறது. இந்த இனம் இமைன்களை அமீன்களாகவும், ஆல்க்கைல் குளோரைடுகளை ஐதரோகார்பன்களாகவும் குறைக்கிறது.[10] எடுத்துக்காட்டாக, SmBr2(hmpa)x வளையயெக்சைல் குளோரைடை வளையயெக்சேனாக மாற்றுகிறது.[11] ஒரு செயலூக்கி இல்லாவிட்டால், டெட்ரா ஐதரோபியூரானில் உள்ள கீட்டோன்களை சமாரியம்(II) புரோமைடு குறைக்கும்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia