சமாரியம் ஆக்சியயோடைடு (Samarium oxyiodide) என்பது SmOI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். சமாரியம்(II) அயோடைடுடன் உலர் ஆக்சிசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சமாரியம் ஆக்சியயோடைடு சேர்மத்தைப் பெறலாம். காற்றில் 335 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால் இது ஆக்சிசனேற்றம் அடைகிறது. மேலும் 460 °செல்சியசு, 560 °செல்சியசு மற்றும் 640 °செல்சியசு வெப்பநிலைகளுக்கு சூடுபடுத்தப்பட்டால் nSmOI·Sm2O3 சேர்மங்கள் உருவாகின்றன. வாய்ப்பாட்டிலுள்ள n என்பது முறையே 7, 4, 2 என்ற எண்களைக் குறிக்கிறது. மேலும் 885 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால் முழுமையாக சமாரியம் ஆக்சைடாக மாறுகிறது.[2] சமாரியம் ஆக்சியயோடைடு புரோப்பைலீன் ஆக்சைடு வழிப்பெறுதிகளை மெத்தில் கீட்டோன்களாக மறுசீரமைக்க உதவுகிறது.[3]சமாரியம்(III) அயோடைடு, சோடியம் அயோடைடு மற்றும் சோடியம் ஆகியவற்றுடன் 903 கெல்வின் வெப்பநிலையில் தாண்டலம் கொள்கலனில் வினைபுரிந்து கருப்பு நிறத்திலான Sm4OI6 சேர்மத்தைக் கொடுக்கிறது.[4]