சமாரியம்(III) பாசுபேட்டு
சமாரியம்(III) பாசுபேட்டு (Samarium(III) phosphate) என்பது SmPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியத்தின் அறியப்பட்ட பாசுபேட்டுகளில் இதுவும் ஒன்றாகும். தயாரிப்புஏதாவதொரு கரையக்கூடிய சமாரியம்(III) உப்புடன் சோடியம் மெட்டாபசுபேட்டைச் சேர்த்து வினை புரியச் செய்தால் சமாரியம்(III) பாசுபேட்டு உருவாகிறது:
பாசுபாரிக் அமிலத்துடன் சமாரியம்(III) குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் சமாரியம்(III) பாசுபேட்டைத் தயாரிக்கலாம்.[1] பண்புகள்சமாரியம்(III) பாசுபேட்டு 750 ° செல்சியசு வெப்பநிலையில் சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து Na2SmF2PO4 சேர்மத்தை உருவாக்குகிறது. P21/n என்ற இடக்குழுவுடன் a = 0.6669 நானோமீட்டர், b = 0.6868 நானோமீட்டர், c = 0.6351 நானோமீட்டர், β = 103.92 °, Z = 4 என்ற அளவுருக்களுடன் சமாரியம்(III) பாசுபேட்டு ஒற்றைச்சரிவச்சு படிகங்களாக உருவாகிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia