சமாரியம்(III) மாலிப்டேட்டு
சமாரியம்(III) மாலிப்டேட்டு (Samarium(III) molybdate) என்பது Sm2(MoO4)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியம், மாலிப்டினம், ஆக்சிசன் ஆகிய மூன்று தனிமங்கள் சேர்ந்து சமாரியம்(III) மாலிப்டேட்டு உருவாகிறது. தயாரிப்புசமாரியம்(III) நைட்ரேட்டு மற்றும் சோடியம் மாலிப்டேட்டு சேர்மங்களை 5.5~6.0 காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) வரம்பில் வினைபுரியச் செய்வதன் மூலம் சமாரியம்(III) மாலிப்டேட்டை தயாரிக்கலாம்.[2] இதன் ஒற்றைப் படிகத்தை 1085 பாகை செல்சியசு வெப்பநிலையில் சொக்ரால்சுகி படிக வளர்ச்சி முறையில் வளர்க்கலாம். சமாரியம் மற்றும் மாலிப்டினம்(VI) ஆக்சைடை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் சமாரியம்(III) மாலிப்டேட்டை தயாரிக்கலாம்:
இயற்பியல் பண்புகள்சமாரியம்(III) மாலிப்டேட்டு பல மாற்றங்களுக்கு உட்பட்டு ஊதா நிறப் படிகங்களாக உருவாகிறது. 193 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் இது P ba2 என்ற இடக்குழுவில் a = 1.04393 நானோமீட்டர், b = 1.04794 நானோமீட்டர், c = 1.07734 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு செல் அளவுருக்க்களுடன் செஞ்சாய் சதுர படிகத் திட்டத்தை ஏற்கிறது. 193 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இது ஒற்றைச் சாய்வு படிகத் திட்டத்தை ஏற்று படிகமாகிறது.[3][4] சமாரியம்(III) மாலிப்டேட்டு பெர்ரோமின் பண்புகளை வெளிப்படுத்துகிறது.[5] இது Sm2(MoO4)3•2H2O என்ற வாய்பாட்டிலான ஒரு படிக நீரேற்றாகவும் உருவாகிறது. சமாரியம்(III) மாலிப்டேட்டை 500~650 °செல்சியசு வெப்பநிலையில் ஐதரசனுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் நான்கிணைய மாலிப்டினம் சேர்மமான Sm2Mo3O9 உருவாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia