2400 பாகை செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் மற்றும் போரான் தனிமங்கள் நேரடியாக வினையில் ஈடுபட்டு சமாரியம் டெட்ராபோரைடு உருவாகிறது.
Sm + 4B → SmB4
பண்புகள்
சமாரியம் டெட்ராபோரைடு செஞ்சாய்சதுரப் படிகத் திட்டத்தில் படிகங்களாக உருவாகிறது. P4/mbm என்ற இடக்குழுவில் a = 0.7174 நானோமீட்டர், c = 0.40696 நானோமீட்டர், Z = 4, என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் தோரியம் டெட்ராபோரைடு படிக அமைப்பையும் கொண்டுள்ளது.[1][2][3][4][5]
திண்மநிலை மற்றும் திரவநிலை ஒன்றாகச் சேர்ந்து இரண்டாவது திண்மநிலையை உருவாக்கும் வினையான பெரிடெக்டிக் வினையில் 2400 பாகை செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் டெட்ராபோரைடு உருவாகிறது.[1]
25 கெல்வின் மற்றும் 7 கெல்வின் வெப்பநிலைகளில் இச்சேர்மத்தில் காந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.[6]
மேற்கோள்கள்
↑ 1.01.1Диаграммы состояния двойных металлических систем. Vol. 1. М.: Машиностроение. 1996. ISBN5-217-02688-X. {{cite book}}: Unknown parameter |agency= ignored (help)
↑Самсонов Г.В., Серебрякова Т.И., Неронов В.А. (1975). Бориды. М.: Атомиздат.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)