சமாரியம்(III) ஆக்சலேட்டு
சமாரியம்(III) ஆக்சலேட்டு (Samarium(III) oxalate) என்பது Sm2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்..[1] சமாரியமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சமாரியம்(III) ஆக்சலேட்டு தண்ணீரில் கரையாது. மாறாக தண்ணீருடன் வினைபுரிந்து மஞ்சள் நிறத்திலான படிக நீரேற்றை உருவாக்குகிறது.[2] தயாரிப்புதண்ணீரில் கரையக்கூடிய சமாரியம் உப்புகளை ஆக்சாலிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து சமாரியம்(III) ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது. :[3]
ஒரு நீரிய கரைசலில் சமாரியம் நைட்ரேட்டுடன் ஆக்சாலிக் அமிலத்தை வினைபுரியச் செய்தும் இதைத் தயாரிக்கலாம்.
இயற்பியல் பண்புகள்சமாரியம்(III) ஆக்சலேட்டு தண்ணீருடன் ஒரு படிக நீரேற்றாக Sm2(C2O4)3 • 10H2O என்ற மஞ்சள் நிற படிகங்களுடன் உருவாகிறது. . வேதிப் பண்புகள்சமாரியம்(III) ஆக்சலேட்டை சூடுபடுத்தினால் சிதைவடையும்:[4]
படிக நீரேற்றான Sm2(C2O4)3 • 10H2O படிகமானது படிப்படியாக சிதைவடையும். [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia