விகிதவியல் அளவில் தூய சமாரியத்தையும் கந்தகத்தையும் சேர்த்து வினைபுரியச் செய்து சமாரியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது:
Sm + S -> SmS
இயற்பியல் பண்புகள்
சமாரியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பின் படிகங்களாக உருவாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5970-0.5863 நானோமீட்டர் Z = 4, என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பை கொண்டுள்ளது.[2]
1500 °செல்சியசு , 1940 °செல்சியசு அல்லது 2080 °செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் மோனோசல்பைடு சேர்மம் ஓரியல்பாக உருகும்.
சமாரியம் மோனோசல்பைடு ஒரு சால்கோசெனைடு பொருள் ஆகும். உலோகம் மற்றும் ஒரு குறைக்கடத்தி[3]என்ற இரண்டு சாத்தியமான நிலைகளில் இது காணப்படுகிறது. இதன் விளைவாக, சமாரியம் மோனோசல்பைடு ஒரு மாறக்கூடிய பொருளாக கணிசமான ஆர்வத்தைப் பெற்றுள்ளது.[4]
பயன்
சமாரியம் மோனோசல்பைடு உருமாற்றத்திற்கு அதிக உணர்திறன் கொண்டது. எனவே, விசை, முறுக்கு, முடுக்கம் போன்றவற்றின் அழுத்த உணரிகளை உருவாக்குவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய பொருளாகப் பயன்படுகிறது.[5]