சர்மிளா தாகூர்
சர்மிளா தாகூர் (Sharmila Tagore) இந்திய நாட்டின் வங்காள மொழித் திரைப்பட நடிகை ஆவார். இவர் சோர்மிளா தாக்கூர் எனவும் அழைக்கப்படுகிறார். 1944 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 08 ஆம் தேதியன்று பிறந்தார். தன்னுடைய நடிப்புக்காக பல தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா மற்றும் பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியத் திரைப்பட தணிக்கை குழுவுக்குத் தலைமை வகித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் யூனிசெப் நல்லெண்ண தூதராக இவர் நியமிக்கப்பட்டார்.[1]. பூர்வீக விபரம்சர்மிளா தாகூர் பிரித்தானியாவின் இந்தியா கார்ப்பரேசனில் பொது மேலாளராக இருந்த கீத்ந்திரநாத் தாகூர் என்ற வங்காளிக்கும், ஆரா தாகூர் (நேரே பராவா) என்ற அசாமிய பெண்மணிக்கும் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி ஆந்திராவின் தலைநகர் ஆன ஐதராபாத்தில் பிறந்தார். கலப்பினத்தவராய் இருந்தாலும் இருவரும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூருக்கு சொந்தம் ஆவார்கள். தாகூரின் மைத்துனர் மற்றும் புகழ்பெற்ற ஓவியரான கசேந்திரநாத் தாகூரின் பேரன் தான் கீத்ந்திரநாத் தாகூர் ஆவார். உண்மையில், சர்மிளா தாகூர் ரபீந்திரநாத் தாகூருக்கு மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டவர் ஆவார். இவரது தாய்வழி பாட்டி லத்திகா பாரு (என் தாகூர்) ரபீந்திரநாத் தாகூரின் சகோதரர் டிவிசேந்திரநாத் தாகூரின் பேத்தி ஆவார். சர்மிளா தாகூர் பழைய இந்தி நடிகை தேவிகா ராணிக்கும் சற்று தொலை தூர உறவினர் ஆவார் . ஆரம்பகால வாழ்க்கைஇந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஐதராபாத் மாநிலத்தில் வங்காளக் குடும்பத்தில் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி சர்மிளா தாகூர் பிறந்தார். இவருடைய தந்தை கிதிந்திரநாத் தாகூர் பிறப்பின் போது எல்சின் மில்சு உரிமையாளரான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் துணைப் பொது மேலாளராக இருந்தார்.சர்மிளா தாகூர் மூன்று குழந்தைகளில் மூத்தவராக இருந்தார். இரு தங்கைகள், காலம் சென்ற டின்கு தாகூர் என்ற ஓந்த்ரிலா குண்டா ஆவார். இவர் தான் 1957 ஆம் ஆண்டில் காபூலி வாலா என்ற சிங்களப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மினி என்ற சிறுமியாய் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். அதன் பின்னரே சர்மிளா திரைப்படத்தில் நடிக்க வந்தார். மற்றொரு சகோதரி ரோமிலா சென், பல ஆண்டுகளாக பிரிட்டானியா நிறுவன தலைமை இயக்க அலுவலராக பணிபுரிந்த நிக்கல் சென்னின் மனைவி ஆவார். பள்ளி வாழ்க்கைதாகூர் செயின்ட் சான்சு மறைமாவட்டத்தின் உயர்நிலைப் பள்ளி மற்றும் அசன்சோல், லொரேட்டோ கான்வெண்ட், ஆகிய இடங்களில் கல்வி பயின்றார் . ஆனால் 13 வயதில் கல்வியில் நாட்டம் கொள்ளவில்லை. எனவே அவரால் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. எனவே பள்ளியை விட்டு விலகி 14 வயதில் தன் தங்கையை தொடர்ந்து சினிமாவில் நடிக்க களம் இறங்கினார். தொழில் வாழ்க்கைசர்மிளா தாகூர் நடிகையாக 1959 ஆம் ஆண்டு சத்யசித் ரேயின் திரைப்படமான அபுர் சன்சார் (அபுவின் உலகம்) மூலம் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இதில் முதன்மை கதாபாத்திரத்தின் அவல நிலையிலுள்ள மணமகளாகத் தோன்றினார். சத்யசித்ரேவுக்கான அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பது போல், "திரைப்படத்தில் பணியாப்போது அவர் வெறும் பதினான்கு வயதே நிரம்பியிருந்தார். அதற்கு முன் அவருக்கு எந்த நடிப்பு அனுபவமும் இருந்ததில்லை. படப்பிடிப்பு தொடங்கியதும், நடிப்பின் போது நெறிமுறைகளுக்காக சத்யசித்ரே சர்மிளாவைத் திட்டவேண்டியிருந்தது என்றாலும் சத்யசித்ரே தன்னுடைய அடுத்த படமான தேவி யிலும் கூட இவரை நடிகக வைத்தார்."[2] இவர் ரேயின் பல திரைப்படங்களில் தோன்றினார். மீண்டும் அவர் செளமித்திர சாட்டர்சி உடன் இணைந்து நடித்தார். 1964 ஆம் ஆண்டில் சக்தி சமந்தாவின் காசுமீர் கி காளி திரைப்படத்தின் மூலம் இவர் இந்தி மொழி திரைப்படத்தின் பிரபல நடிகையாக உருவானார். சக்தி சமந்தா மீண்டும் இவரைப் பல வெற்றிப் படங்களில் நடிக்க வைத்தார். திரைப்படத்தில் முதன் முறையாக பிகினி நீச்சல் உடை அணிந்து நடித்தார் .குறிப்பாக ஆன் ஈவனிங் இன் பாரிசு 1967 ஆம் ஆண்டு, இந்திய நடிகை பிகினி அணிந்து தோன்றிய முதல் தோற்றமாக இருந்தது. இதன் மூலம் இந்தியாவில் முதன் முறையாக பிகினி உடை அணிந்து நடித்தவர் என்ற பெயருடன் சினிமாவில் வலம் வந்தார்.[3][4] இது பழம்பாணியிலிருந்த இந்தியப் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்ல[5][6] இது பல நடிகைகள் பிகினி அணிந்து வரக்கூடிய சூழலை உருவாக்கி, பர்வீன் பாபி (யே நசுதீகியான் , 1982[7]), சீனத் அமான் (கீரா பன்னா 1973; குர்பாணி , 1980[7]) மற்றும் டிம்பிள் கபாடியா (பாபி , 1973[7]), ஆகியோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் இது பாலிவுட்டில் தாகூரின் கதாபாத்திரத்தை ஒரு பாலியல் குறியீடாக உருவாக்கியது.[8][9][10] பிகினியை அணிந்ததால் இந்தியப் பத்திரிக்கைகள் எல்லா காலங்களுக்குமான பத்து முண்ணனி நடிகைகளில் ஒருவராக இவருடைய பெயரைப் பரிந்துரைத்தன. இது அடக்க ஒடுக்க நிலையிலான பெண்ணின் இயல்பை அடையாளப்படுத்தி செயல்படுத்தி வந்த மும்பை திரைப்படங்களுக்கு எதிரான வரம்பு மீறிய செயலாக இருந்தது.[11] ஆனால், தாகூர் சென்ட்ரல் போர்ட் ஆப் பிலிம் சர்டிபிகேசன் தலைவராக இருந்தபோது, இந்திய சினிமாக்களில் பிகினி அணிவது அதிகரித்து வருவதைப் பற்றி தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார்.[12] ஆராதனா (1969) மற்றும் அமர் பிரேம் (1972), போன்ற திரைப்படங்களுக்காக சமந்தா பின்னாளில் தாகூரை ராசேசு கண்ணாவுடன் இணைத்தார் . பின்னர் பணியாற்றிய திரைப்படத்தில் தாகூர் என்றும் நினைவை விட்டு நீங்கா கதாபாத்திரமான புசுபாவாக, கொல்கத்தா நகரின் அரசவை பரத்தையாக, மீண்டும் ராசேசு கண்ணாவுக்கு இணையாகத் தோன்றினார். இதில் ராசேசு கண்ணா அடிக்கடி கூறும் வசனம் "புசுபா நான் கண்ணீரை வெறுக்கிறேன்..." இடம்பெற்றது. இதர இயக்குநர்கள், அவர்கள் இருவரையும் இணைத்து டாக் (1973 ஆம் ஆண்டு), மாலிக் (1972 ஆம் ஆண்டு) மற்றும் சபார் (1970 ஆம் ஆண்டு) ஆகிய திரைப்படங்களைக் கொடுத்தனர். அவர் குல்சாரின் 1975 ஆம் ஆண்டு திரைப்படம், மெளசம் மில் திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் மீரா நாயரின் 1991 ஆம் ஆண்டு திரைப்படம் மிசிசிப்பி மசாலா திரைப்படத்தில் கதாநாயகி சரிதா சௌத்ரியின் தாயாக ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடைய சமீபத்திய வெளியீடு, அமோல் பலேகரின் மராத்திய திரைப்படமான சமான்தார்ஆகும். இவருடைய முந்தைய வெளியீடுகள் விது வினோத் சோப்ரா திரைப்படம், ஏக்லவ்யா: த ராயல் கார்டு, நிச வாழ்க்கை தாய் மற்றும் மகன், சர்மிளா தாகூர் மற்றும் சயிப் அலி கானை இணைக்கிறது. ஆசிக் ஆவாரா (1993 ஆம் ஆண்டுக்குப்) பிறகு முதல் முறையாக இவர்கள் திரையில் ஒன்றாக பங்கு பெறுகிறார்கள். சொந்த வாழ்க்கைபடௌடியின் நவாப், மன்சூர் அலி கான் படௌடியை சர்மிளா தாகூர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்: சையப் அலி கான் (பி. 1970 ஆம் ஆண்டு), சபா அலி கான் மற்றும் சோகா அலி கான் (பி. 1978 ஆம் ஆண்டு). விருதுகள்
குறிப்புதவிகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஷர்மிளா தாகூர்
|
Portal di Ensiklopedia Dunia