சோன்பூர், பீகார்
சோன்பூர் இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள சாரண் மாவட்டத்தில் கந்தக் நதியின் கரையில் அமைந்திருக்கும் ஒரு நகரம் ஆகும். சோன்பூரில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் உலகப் புகழ்பெற்ற கால்நடை கண்காட்சி நடத்தப்படும், இங்கு விற்பனைக்கு வரும் அலங்கரிக்கப்பட்ட யானைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம். இங்கு கண்டகி ஆறு, கங்கை ஆற்றுடன் கலக்கிறது. போக்குவரத்துசோன்பூர் தொடருந்து நிலையம் அருகிலுள்ளது. உலகிலுள்ள பத்து நீளமான தொடருந்து மேடை சந்திப்பு நிலைய வரிசையினை எடுத்துக்கொண்டால், இங்கு எட்டாவது நீளமான தொடருந்து மேடை உள்ளது (இது கட்டப்படும்பொழுது உலகிலே இரண்டாவது நீளமான மேடை கொண்ட தொடருந்து நிலையமாக திகழ்ந்தது). இந்த நகரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளோடும் தொடருந்து வழியே இணைக்கப்பட்டுள்ளது.[1] இது கிழக்குமத்திய தொடருந்து மண்டலத்தின் ஒரு கோட்டத்தின் தலைமையகமாகவும் திகழ்கிறது. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia