சசாராம்
சசாராம் (Sasaram) (Hindi: सासाराम, Urdu: سسرام), இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தின் ரோத்தாஸ் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். சாசாராம், பஷ்தூன் தில்லி மாமன்னர் சேர் சா சூரி மறைந்த இடமாகும். அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்![]() பேரரசர் அசோகர் நிறுவிய 13 சிறு பாறைக் கல்வெட்டுகளில் ஒன்று சாசாராமின் கைமூர் மலையின் சிறு குகையில் உள்ளது.[2] [3] கல்வெட்டுக் குறிப்பின் உள்ளடக்கம்![]() ![]() ![]() ![]() ![]() ![]()
இ. ஹல்ட்சுச் என்பவர் சாசாராம் பாறைக் கல்வெட்டின் புதிய மொழி பெயர்ப்பை வெளியிட்டுள்ளார்.[4]}}
வரலாறுசசாராமில் பிறந்த ஆப்கானிய பஷ்தூனியரான சேர் சா சூரி, முகலாயர்களிடமிருந்து தில்லியை கைப்பற்றி வட இந்தியாவை ஆண்டவர். சிக்கலற்ற நிலவரி, நில நிர்வாகம், நீர்பாசானம், சாலை அமைத்தல் போன்றவைகளில் இவரது சீர்திருத்தங்களை, பின்னால் ஆட்சிக்கு வந்த முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் கடைப்பிடித்தனர். சசாராம் நகரத்தில் செயற்கையாக அமைந்த ஏரியின் நடுவில், இந்தோ ஆப்கானிய கட்டிடக்கலையில் 122 அடி உயரம் கொண்ட ஒரு சிவப்பு கல்லால் ஆன குவி மாடத்தை நிறுவினார். [7] இராஜ அரிச்சந்திரன், தன் மகன் லோகிதாசன் பெயரில் கி மு 7ஆம் நூற்றாண்டில், சசாராம் நகரத்தில் கட்டிய ரோட்டஸ்காட் கோட்டை உள்ளது. தட்பவெப்பம்கோடைக் காலத்தில் பாட்னா, கயை போன்று சசாராம் மிக அதிக வெப்பம் கொண்டது. போக்குவரத்துசாலைகள்சேர் சா சூரி அமைத்த பெரும் தலைநெடுஞ்சாலை சசாராம் வழியாக செல்வதால், வட இந்தியா முழுவதையும் சாலை வழியாக பயணிக்கலாம். தொடருந்துசசாராம் தொடருந்து நிலையம், பாட்னா, கொல்கத்தா, வாரணாசி, மும்பை, கான்பூர், லக்னோ, மற்றும் தில்லி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. புகழ் பெற்றவர்கள்
மக்கள் தொகையியல்2011ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சசாராமின் மக்கள் தொகை 147,408 ஆகவும், அதில் ஆண்கள் 52% ஆகவும்; பெண்கள் 48% ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 80.26%ஆகவும், ஆண்கள் எழுத்தறிவு 85%ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 75%ஆகவும் உள்ளது. மக்கள் தொகையில் 13% ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர்.[10] சாசாராமில் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர், பௌத்தர்கள் மற்றும் சமண சமய மக்கள் கலந்து வாழ்கின்றனர். பொருளாதாரம்கங்கை ஆறு பாய்வதால் சசாராம் வேளாண் விளை பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. மேலும் சிவப்பு வண்ண மணற்கல் சுரங்கங்களிலிருந்து, கட்டுமானப் பணிகளுக்கு தேவையான கற்கள் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia