திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதநாதர் கோயில், சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து, காவேரி நதியைக் கடந்து செல்கையில், அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர், ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது, ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது. இந்த மலையை மரகதமலை என்பர். காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும், ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது, சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர். நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர், இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார். திருத்தல வரலாறுஇத்தல நாதர், மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு. முன்னர், ஆதிசேஷனும், வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட, கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார். ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சுவாமிகள் இந்த தளத்தின் சிறப்பை கூறுகிறார். " ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் " திரு ஈங்கோய் மலையிலே அழகுமிக்க மரகதத் திருமேனியாக காண்பித்து இறைவன் அழகிய வடிவில் குடிகொண்டுள்ளார். என்று கூறுகின்றார். சிறப்புகள்
மூன்று தலங்கள்காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும், ஒரே நாளில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில், இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர். [1] திருத்தலப் பாடல்கள்63 நாயன்மார்களில், முதன்மையானவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர், இத்தலத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளில் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றினைக் கீழே காணலாம்: முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் 070 திருவீங்கோய்மலை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (மா 5 / காய்) (1, 5 சீர்களில் மோனை)
இத்திருத்தலத்தின் மீதான பிறிதொரு தேவாரப் பதிகம் கீழே தரப்பட்டுள்ளது: 010 நக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது! பதினொன்றாம் திருமுறை இரு விகற்ப நேரிசை வெண்பா அடியும் முடியும் அரியும் அயனும் இவற்றையும் பார்க்ககுறிப்புதவிகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia