இந்தத் தொடர் பிராங்க் கோட்டையைச் சுற்றி வருகிறது, அவர் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக கொடிய முறைகளைப் பயன்படுத்தி அவரே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பவராக நடிகர் ஜோன் பெர்ந்தல்[8][9] என்பவர் டேர்டெவிலின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து எபோன் மோஸ்-பச்ராச், பென் பார்னெஸ், அம்பர் ரோஸ் ரேவா, டேனியல் வெப்பர், பால் ஷூல்ஸ், ஜேசன் ஆர். மூர், மைக்கேல் நாதன்சன், ஜெய்ம் ரே நியூமன், டெபோரா ஆன் வோல், ஜோஷ் ஸ்டீவர்ட், புளோரியானா லிமா மற்றும் ஜார்ஜியா விக்ஹாம் ஆகியோர் நடித்துள்ளனர்.
பனிஷரை மையமாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சித் தொடர், 2011 இல் பாக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்து, ஜூன் 2015 இல் டேர்டெவிலின் இரண்டாவது பருவத்தில் நடிகர் ஜோன் பெர்ந்தல் நடித்தார். டேர்டெவிலின் இரண்டாவது பருவம் வெளியிடப்படுவதற்கு முன்பு, சனவரி 2016 இல் தி பனிஷர் என்ற தலைப்பில் வழித்தொடர் உருவாக்கம் தொடங்கியது. ஏப்ரல் 2016 இல் மார்வெல் மற்றும் நெற்ஃபிளிக்சு இந்தத் தொடர் பற்றிய செய்திகள் அறிவித்தது. இந்தத் தொடர் நியூயார்க் நகரில் படமாக்கப்பட்டது.
இந்த தொடரின் முதல் பருவம் அனைத்து அத்தியாயங்களும் நவம்பர் 17, 2017 அன்று வெளியிடப்பட்டன. ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தத் தொடரின் இரண்டாவது பருவம் தயாரிக்கப்பட்டு, சனவரி 18, 2019 அன்று வெளியிடப்பட்டது. பிப்ரவரி 18, 2019 அன்று நெற்ஃபிளிக்சு இரண்டு பருவங்களுக்கு பிறகு தொடரை ரத்து செய்தது.