இசுபைடர் மேன் திரைப்படம் (இசுபைடர் மேன் திரைப்படம்) என்பது ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோரால் உருவாக்கப்பட்டு மற்றும் மார்வெல் வரைகதை வெளியீடுகளில் இடம்பெற்ற வரைகதை புத்தக கற்பனையான மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் பல மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தோன்றியுள்ளது.
முதல் முதலில் 1977 ஆம் ஆண்டில் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் நடிகர் 'நிக்கோலஸ் ஹம்மண்ட்' என்பவர் பீட்டர் பார்க்கர் / இசுபைடர் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இரண்டு முறை இந்த கதாபாத்திரம் மூலம் வெவ்வேறு திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். 1981 ஆம் ஆண்டில் ஜப்பான் மொழியில் ஜப்பான் டோய் நிறுவனம் 'இசுபைடர் மேன்' என்ற தொலைக்காட்சித் தொடரை உருவாக்கியது. 'ஷின்ஜி டோட் டக்குயா' என்பவர் யமாஷிரோ / ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த கதாபாத்திரத்திற்கான திரைப்பட உரிமையைப் பெற்று 2014 வரை இரண்டு திரைப்படத் தொடர்களை உருவாக்கியது. நடிகர் தோபி மக்குயர் என்பவர் நடிப்பில் இசுபைடர்-மேன் (2002), இசுபைடர்-மேன் 2 (2004), இசுபைடர்-மேன் 3 (2007) மற்றும் நடிகர் ஆண்ட்ரூ கார்பீல்ட் நடிப்பில் தி அமேசிங் ஸ்பைடர்-மேன் (2012), தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 (2014) போன்ற திரைப்படங்கள் வெளியானது.
இந்த புதிய பதிப்பில் நடிகர் டாம் ஹாலண்ட் என்பவர் ஸ்பைடர் மேனாக சித்தரிக்கப்பட்டார்.[7] மேலும் இவர் நடிப்பில் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[8][9] முதல் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) வரை ஐந்து படங்களில் தோன்றியுள்ளார்.[10] செப்டம்பர் 2019 இல் டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்கள் ஹாலண்டின் நடிப்பில் குறைந்தது இரண்டு தோற்றங்களை உருவாக்க ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டன: அவை தனி படம் மற்றொரு தனி படம் மற்றும் குழு படம் ஆகும்.
இயங்குபடம் செய்யப்பட்ட ஸ்பைடர் மேன் படத்திற்கான திட்டங்கள் சோனி நிறுவனத்தால் ஏப்ரல் 2015 இல் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அவை சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் நிறுவனத்திடமிருந்து 'இசுபைடர் மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்சஸ்' (2018) என்ற படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஷமீக் மூர் என்பவர் மைல்ஸ் மோரல்ஸ் / ஸ்பைடர் மேன் ஆகியோருக்கு குரல் கொடுத்துள்ளார். இது பீட்டர் பார்க்கரின் கதாபாத்திரத்தில் இருந்து வேறுபட்டு புதிய காதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டது.
இசுபைடர் மேன் படங்கள் பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றன. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அவை மொத்தமாக $6.3 பில்லியனை வசூலித்துள்ளன. 2019 ஆம் ஆண்டு வெளியான இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் என்ற திரைப்படம் உலகளவில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வசூல் செய்தது. இதுவே ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த முதல் படமாகவும் மற்றும் சோனி நிறுவனத்தின் மிக அதிக வசூல் செய்த படமாகவும் திகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு வெளியான இன்டூ தி ஸ்பைடர்-வெர்சஸ் என்று இயங்குபடம் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதுதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால தொலைக்காட்சி படங்கள்
தி அமேசிங் ஸ்பைடர் மேன் தொடர் (1977–1981)
படம்
வெளியான திகதி
இயக்குநர்
திரைக்கதை எழுத்தாளர்
தயாரிப்பாளர் (கள்)
இசுபைடர் மேன்
செப்டம்பர் 14, 1977 (1977-09-14)
ஸ்வாகேமர்
ஆல்வின் போரெட்ஸ்
சார்லஸ் டபிள்யூ. புரைஸ், டேனியல் ஆர். குட்மேன், எட்வர்ட் ஜே. மாண்டாக்னே
இசுபைடர் மேன் ஸ்ட்ரிக்ஸ் பாக்
மே 8, 1978 (1978-05-08)
ரான் ஸ்டேட்லோப்
ராபர்ட் ஜேன்ஸ்
இசுபைடர் மேன்: தி டிராகன் சல்லேங்ஸ்
மே 9, 1981 (1981-05-09)
லியோனல் ஈ. சீகல்
இசுபைடர் மேன் 1977
1977 ஆம் ஆண்டில் 'தி அமேசிங் ஸ்பைடர் மேன்' என்ற பெயரில் தொலைக்காட்சி படமாகவும், அமெரிக்காவிற்கு வெளியே கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் 'ஸ்பைடர் மேன்' என்ற பெயரிலும் வெளியிட்டது. இந்த திரைப்படம் ஸ்வாகேமர் இயக்கத்தில் ஆல்வின் போரெட்ஸ் எழுத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த படம் சிபிஎஸ்ஸில் செப்டம்பர் 14, 1977 அன்று திரையிடப்பட்டது, 1980 இல் விஎச்எஸ் வெளியீட்டைப் பெற்றது.