இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (ஆங்கிலம்: Spider-Man: Homecoming) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வல் காமிக்சின் கதாபாத்திரமான இசுபைடர்-மேன் என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது. இது இசுபைடர்-மேன் திரைப்பட மறுதொடக்கத்தில் இரண்டாவது மற்றும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினாறாவது திரைப்படம் ஆகும். இப்படத்தின் திரைக்கதையானது ஜொனாதன் கோல்ட்ஸ்டைன், ஜான் பிரான்சிசு டேலி, ஜோன் வாட்ஸ், கிறிஸ்டோபர் போர்டு, கிறிஸ் மெக்கேனா மற்றும் எரிக் சோமர்ஸ் ஆகியோர் அடங்கிய குழுவால் எழுதப்பட்டது. கேவின் பிகே[4] மற்றும் அமி பாஸ்கல் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்தை ஜோன் வாட்ஸ்[5] என்பவர் இயக்க, டாம் ஹாலண்ட், மைக்கேல் கீட்டன், ஜான் பெவ்ரோ, ஜெண்டயா, கிவ்வினெத் பேல்ட்ரோ, டொனால்ட் குளோவர், ஜேக்கப் படலோன், டைன் டேலி, மரிசா டோமே மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகியோர் நடித்துள்ளனர். இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் படத்தில் பீட்டர் பார்கர் என்பவர் இசுபைடர்-மேன் என்ற நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையை என இரண்டையும் நிலைப்படுத்த முயற்சிக்கிறார்.[6] 2015 பெப்ரவரியில் மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் சோனி[7] ஆகியவை இசுபைடர்-மேன் பாத்திர உரிமைகளை பகிர்ந்து கொள்ளும் விதாமன ஒரு ஒப்பந்தத்தை எட்டின. அடுத்த சூன் மாதம், படத்தில் டாம் ஹாலண்ட்[8] முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடிக்கவும், ஜோன் வாட்ஸ் இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து டைன் டேலி மற்றும் ஜேக்கப் படலோன் ஆகியோரை ஒப்பந்தம் செய்தனர். 2016 ஏப்ரலில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் ராபர்ட் டவுனி ஜூனியர் பாத்திரங்களான டோனி ஸ்டார்க் / அயன் மேன் என்ற பாத்திரங்கள் உள்ளிட்ட கூடுதல் நடிகர்களைச் சேர்ந்து இந்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. படத்தின் முதன்மை படப்பிடிப்பு 2016 சூன் அன்று ஜோர்ஜியாவின் ஃபயௌட் கவுண்டியில் உள்ள பைன்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் தொடங்கி, அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் தொடர்ந்து நடந்தது. முந்தைய இசுபைடர்-மேன் படங்களில் இருந்து இந்த திரைப்படத்தை வேறுபடுத்திக் காட்ட தயாரிப்பு குழு முயற்சி செய்தது. ஸ்பைடர் மேன்: ஹோம்கம்மிங் 28 சூன் 2017 அன்று ஹாலிவுட்டில் திரையிடப்பட்டது, மேலும் 7 சூலை 2017 இல் அமெரிக்காவில் 3டி, ஐமேக்ஸ் மற்றும் ஐமேக்ஸ் 3டி இல் வெளியிடப்பட்டது. இப்படம் உலகளவில் $880 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. மிக வெற்றிகரமான இரண்டாவது ஸ்பைடர் மேன் திரைப்படம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் மிக அதிக அளவில் வசூல் செய்த படம் ஆகும். மேலும் இது விமர்சகர்களிடன் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியானது 5 சூலை 2009 அன்று இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் என்ற பெயரில் வெளியானது. மற்றும் மூன்றாம் பாகமான இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் என்ற திரைப்படம் 17 டிசம்பர் 2021 ஆம் ஆண்டு வெளியானது. கதை2015 ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்[9] என்ற படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் இசுபைடர்-மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் மீநாயகங்களுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார். அந்த படத்தின் தொடர்ச்சியாகவே `இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது. அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் அயன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி ஜூனியர். இதையடுத்து பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை காவல்துறையிடம் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார். இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு விநியோகிப்பது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை அயன் மேனிடம் சொல்கிறார். ஆனால் இசுபைடர்-மேனின் பேச்சை அயன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் விநியோகம் செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார். அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க இசுபைடர்-மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த அயன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார். ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு ஆடையை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது அவஞ்சர்ஸ் குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார். பிறகு ஒரு சொதப்பலான ஒரு இசுபைடர்-மேன் ஆடையை அணிந்தபடியே, பல சாகசங்களைச் செய்து வில்லனைக் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்து அயர்ன் மேனின் பாராட்டைப் பெறுகிறான் பீட்டர் பார்க்கர். டோனி ஸ்டார்க் இப்போது பீட்டர் பார்க்கருக்கு புதிய அதிநவீன ஸ்பைடர்மேன் ஆடையை அளிக்கிறார். மேலும் ஸ்பைடர்மேனை அவருடைய சக்திவாய்ந்த மனிதர்களின் அமைப்பான அவென்சர்ஸில் இணைய அவருக்கு ஒரு வாய்ப்பும் கொடுக்கிறார். இருந்தாலும் நடந்த சம்பவங்களை யோசித்த பீட்டர் பார்க்கர் இனிமேல் சாதாரணமான மக்களுக்கு உதவிசெய்யும் சராசரி ஸ்பைடர்மேனாகவே இருக்க ஆசைப்படுவதாக பெருந்தன்மையுடன் முடிவு எடுத்து டோனி ஸ்டார்க்கின் நன்மதிப்பை பெறுகிறான். நடிகர்கள்
தொடர்ச்சியான தொடர்கள்இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia