ஹாக்ஐ (தொலைக்காட்சித் தொடர்)
ஹாக்ஐ (ஆங்கிலம்: Hawkeye) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி குற்றப்புனைவு மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் கிளின்ட் பார்டன்[1] மற்றும் கேட் பிசப்[2] ஆகிய மார்வெல் காமிக்சு கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக ஜொனாதன் இக்லா என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த தொடர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாவது தொலைக்காட்சி தொடர் ஆகும். இது மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. மற்றும் இந்த தொடரின் கதை 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இந்த தொடரில் நடிகர் ஜெரமி ரெனர்[3] என்பவர் திரைப்படத் தொடரில் இருந்து மீண்டும் கிளின்ட் பார்டனாக நடிக்க, இவருடன் இணைந்து ஹைலி ஸ்டெயின்பீல்ட்,[4] டோனி டால்டன், பிற பீ, பிரையன் டி'ஆர்சி ஜேம்ஸ், அலெக்ஸ் பவுனோவிக், பியோட்டர் ஆடம்சிக், லிண்டா கார்டெல்லினி, சைமன் கால்லோ, வேரா பார்மிகா, அலகுவா காக்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5] இந்த தொடர் மொத்தம் ஆறு அத்தியாயங்களில் உருவாக்கப்பட்டு தனது முதல் இரண்டு[6] அத்தியாயங்களும் நவம்பர் 24, 2021 அன்று திரையிட்டது, இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடர் ஆகும். இந்தத் தொடர் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் அதன் சண்டைக் காட்சிகள் மற்றும் முன்னணி நடிகர்களின் ஜோடி பொருத்தம் பற்றி பாராட்டினார்கள். மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia