2010 ஆம் ஆண்டில் மார்வெல் தொலைக்காட்சியை உருவாக்கிய பின்னர் மார்வெல் திரைப் பிரபஞ்சம் முதன்முதலில் தொலைக்காட்சிக்கு விரிவடைந்தது. அத்துடன் ஏபிசி நிறுவனத்துடன் கையொப்பம் செய்யப்பட்டு ஏபிசி ஸ்டுடியோஸ் மூலம் செப்டம்பர் 2013 முதல் அக்டோபர் 2020 வரை 12 தொடர்களை உருவாக்கியது. இவை ஏபிசி மற்றும் ஃப்ரீஃபார்ம் போன்ற தொலைக்காட்சியிலும் நெற்ஃபிளிக்சு மற்றும் ஹுலு போன்ற இணையதளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. முக்கிய ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள் திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டடுள்ளது. அவை 'மார்வெல் ஹீரோஸ்' தொடர் என குறிப்பிடப்பட்டன. நெற்ஃபிளிக்சு இணையத்துக்காக தயாரிக்கப்பட்ட தொடர் குழுவை "மார்வெல் நைட்ஸ்" தொடர் என்று அழைக்கப்பட்டது. ஃப்ரீஃபார்ம் மற்றும் ஹுலுவுக்காக இளம் வயதுவந்தோரை கவனம் செலுத்தி தொடர்கள் தயாரிக்கப்பட்டன. இது 2019 டிசம்பரில் மார்வெல் தொலைக்காட்சி மூடப்படுவதற்கு முன்னர் 'அட்வென்ச்சர் இன் ஃபியர்' தொடர் குழு என்று அழைக்கப்பட்டது.
திரைப்படங்களுக்குப் பின்னால் உள்ள தயாரிப்பு ஸ்டுடியோவான மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் டிஸ்னி+ என்ற கோரிய நேரத்து ஒளிதம் சேவைக்காக தங்கள் சொந்தத் தொடரைத் தயாரிக்கத் தொடங்கியது, இதில் முதலாவது தொடர் ஜனவரி 2021 இல் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து குறைந்தது பதினொரு தொடர்கள் தயாரிக்கப்படுகின்றது. இவை படங்களிலிருந்து வரும் துணைக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றது. இவை மார்வெல் தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டிலும் மிகப் பெரிய பொருள் செலவை கொண்டுள்ளன, மேலும் மார்வெல் தொலைக்காட்சித் தொடர்கள் என்று இல்லாத வகையில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களுடன் ஒன்றோடொன்று இணைகின்றன.
இது மார்வெல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பிளவுகளை விரிவுபடுத்துவதாகக் காணப்பட்டது, மேலும் இந்தத் தொடரின் நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்கள் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்படங்களுடன் ஒத்துப்போகாதவாறு எடுக்கப்பட்டதுள்ளது. அதே நேரத்தில் மார்வெல் ஸ்டுடியோவின் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டைக் கொண்டிருந்த ஒரே மார்வெல் தொலைக்காட்சித் தொடர் ஏஜென்ட் கார்ட்டர் ஆகும். இது கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்த பெக்கி கார்ட்டர் என்பவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2018 வாக்கில் மார்வெல் ஸ்டுடியோஸ் டிஸ்னியின் புதிய ஓடிடி தளமான டிஸ்னி+ க்காக பல வரையறுக்கப்பட்ட தொடர்களை உருவாக்கி வருகிறது.
அக்டோபர் 2013 வாக்கில், மார்வெல் நிறுவனம் நெற்ஃபிளிக்சு மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடித் தளத்திற்கு தொடர்களை தயாரிக்க தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் நான்கு நாடகத் தொடர்களும் மற்றும் குறும்தொடர்களும் கோரிய நேரத்து ஒளித சேவைகள் கீழ் தயாரிக்க முன் வந்தது. அதை தொடர்ந்து டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, அயன் பிஸ்ட் மற்றும் லூக் கேஜ் ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி தொடர்களை நெற்ஃபிளிக்சு வழங்குவதாக டிஸ்னி அடுத்த மாதம் அறிவித்தது.
வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மார்வெல் தொடர்கள் ஒளிபரப்பிய பின்னர், நெற்ஃபிளிக்சு அனைத்து தொடர்களையும் பிப்ரவரி 2019 இறுதிக்குள் ரத்து செய்தது, ஆனால் தற்போதுள்ள பருவங்களை தொடர்ந்தும் பார்க்க முடியும். இந்த தொடர்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு நெற்ஃபிளிக்சு அல்லாத தொடர்கள் அல்லது திரைப்படங்களில் இந்த கதாபாத்திரங்கள் தோன்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.