மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம்
மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம் என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரித்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படங்களின் வரிசையாகும். இந்த மூன்றாம் கட்டம் 2016 இல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் வெளியீட்டில் தொடங்கி 2019 இல் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் வெளியீட்டில் முடிந்தது. இதில் 2018 இல் வெளியான மகாசங்கம படமாக அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் மற்றும் அதன் தொடர்ச்சியாக 2019 இல் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் வெளியிடப்பட்டது. இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் ஆகிய படங்களை என்பவர் தயாரிக்க, மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் படத்திற்காக இசுடீபன் பிரவுசர்ட் ஆகியோருடன் இணைந்து கேவின் பிகே என்பவர் ஒவ்வொரு படத்தையும் தயாரித்துள்ளார். இந்த மூன்றாம் கட்டத்தில் மொத்தம் பதினொரு படங்கள் வெளியாகி, பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, உலகளாவில் $13.5 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்று வெற்றி பெற்றது. 2019 இல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. நடிகர்களான கிறிஸ் எவன்ஸ் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோர் இந்த கட்டத்தில் அதிகம் தோன்றின நடிகர்கள் ஆவார்கள். இந்த மூன்றாம் கட்டத்தில் பதினோரு படங்களில் ஐந்து படங்களில் நடித்தனர் அல்லது கௌரவத் தோற்றத்தில் தோன்றினார்கள். மார்வெல் இசுடியோசு நிறுவனம் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மூன்று போலித்தனமான குறும்படங்களை உருவாக்கியது, அதே நேரத்தில் ஒவ்வொரு திரைப்படமும் டை-இன் வரைகதை புத்தகங்களைப் பெற்றது. இந்த மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம், முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் ஆகியவை தி இன்பினிட்டி சாகாவாக உருவாக்கப்பட்டது. வளர்ச்சிஅக்டோபர் 28, 2014 அன்று மார்வெல் இசுடியோசு தலைவர் கேவின் பிகே என்பவர் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), தோர்: ரக்னராக் (2017), பிளாக் பான்தர் (2017), கேப்டன் மார்வெல் (2018), இன்குமன்சு (2018), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் பகுதி 1 மற்றும் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் பகுதி 2 (2019) போன்ற திரைப்படங்கள் மார்வெல் திரைப் பிரபஞ்சம் மூன்றாம் கட்டத்தின் கீழ் வெளியாகும் என ஹாலிவுட்டில் உள்ள எல் கேபிடன் திரையரங்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 2014 இல் 'சோனி பிக்சர்ஸ் ஹேக்' செய்யப்பட்டதைத் தொடர்ந்து இசுபைடர் மேனைப் பகிர்ந்து கொள்வது குறித்து சோனியும் மார்வெலும் உரையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் இசுபைடர் மேனின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்த மார்வெல் விரும்பியது. அதன்பின் எதிர்காலத்தில் அவெஞ்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதைத் தொடரவும், அதே நேரத்தில் சோனி ஆக்கப்பூர்வமான கட்டுப்பாட்டை வைத்திருக்கவும், இசுபைடர் மேன் திரைப்படங்கள் மற்றும் வழிதொடர்களை பயன்படுத்தவும் மார்வெல் அனுமதித்தது. பிப்ரவரி 9, 2015 அன்று இசுபைடர் மேன் படத்தை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் தோன்ற அனுமதிக்க சோனி பிக்சர்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்து, மார்வெல் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு இடுகையையும் வெளியிட்டது. ஜூன் மாதத்தில் நடிகர் டாம் ஹாலண்ட் என்பவர் பீட்டர் பார்க்கர் / ஸ்பைடர் மேன் ஆக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் அவர் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்திலும், அடுத்து சோனி நிறுவனத்தின் இசுபைடர் மேன் படமான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017) என்ற படத்திலும் நடித்தார். மூன்றாம் கட்டத்தில் இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) ஆகியவை சேர்க்கப்பட்டது. பின்னர் தோர்: ரக்னராக் (2017), பிளாக் பான்தர் (2018) மற்றும் கேப்டன் மார்வெல் (2019 ஆகியவற்றுக்கான தேதி மாற்றங்களுக்கு வழிவகுத்தது. வெளியீட்டு அட்டவணையில் இருந்து 'இன்குமன்சு' படம் அகற்றப்பட்டது. இருப்பினும் அது முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை. பின்னர் 'இன்குமன்சு' என்பது 8 அத்தியாயங்களுடன் தொடராக தயாரித்து ஏபிசி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஜூலை 2016 இல் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் - பகுதி 1 என்று பெயரிடப்பட்ட படம் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் என மறுபெயரிடப்பட்டது. அதே சமயம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி முதல் படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகும் வரை, அது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் எனத் தெரியவரும் வரை அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் - பகுதி 2 பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள்நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்
படத்தின் வருவாய்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia