படேதலாவ் ஏரி

படேதலாவ் ஏரி
அமைவிடம்தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம்
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு269 ஏக்கர்

படேதலாவ் ஏரி அல்லது பெரிய ஏரி என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி அருகே காட்டிநாயனப் பள்ளி ஊராட்சியில் ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] மார்க்கண்ட நதியின் குறுக்கே வேப்பனப்பள்ளி அருகே குப்பச்சிப்பாறை என்ற இடத்தில் தடுப்பணை காட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து மாரசந்திரம் வழியாக இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் வரும். இந்த ஏரியில் இருந்து செல்லும் உபரி நீரானது பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் வகையில் வாய்கால் அமைக்கப்பட்டள்ளது. இந்த கால்வாயின் கரையோரத்தில் உள்ள ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. [2] ஆனால் போதிய மழை இன்மையால் பல ஆண்டுகள் ஏரிக்கு நீர் வராமல் வறண்ட நிலையில் இருக்கும் நிலை உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து படேதலாவ் ஏரிக்கு கால்வாய் அமைத்து, வெள்ளப்பெருக்கு காலத்தில் வரும் உபரிநீரை திருப்பி விட்டு ஏரியை நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் இருந்து வருகின்றது.[3]

மேற்கோள்கள்

  1. "எண்ணேகொல்புதூரில் இருந்து படேதலாவ் ஏரிக்கு கால்வாய் அமைக்கும் திட்டம்; நிலம் எடுப்பு தொடர்பாக அரசுக்கு முன்மொழிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்". செய்தி. இந்து தமிழ். 21 சூலை 2019. Retrieved 21 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. எஸ். கே. ரமேஷ் (சூலை 11 2019). "மணல் திருட்டு, கர்நாடகா கட்டிய அணைகளால் கிருஷ்ணகிரி அருகே பாறைகளாக காட்சியளிக்கும் மார்கண்டேய நதி மழைநீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட கோரிக்கை". இந்து தமிழ். 
  3. "நீருக்கு காத்திருக்கும் படேதலாவ் ஏரி எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டம் எப்போது நிறைவேறும்?...நீரில்லாமல் வறண்டு கிடக்கும் வழித்தடங்கள்". செய்தி. தினகரன். 28. சூலை 2019. Archived from the original on 2019-07-29. Retrieved 21 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya