புக்கிட் பக்ரி
பக்ரி அல்லது புக்கிட் பக்ரி (மலாய்; ஆங்கிலம்: Bakri அல்லது Bukit Bakri; சீனம்: 巴口); என்பது மலேசியா, ஜொகூர், மூவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். மலேசியக் கூட்டரசு சாலை 24, பக்ரி நகரத்தை பண்டார் மகாராணி நகர மையத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். 'பக்ரி' என்ற பெயர் ஜொகூர் சுல்தான் அபு பக்காரின் (Sultan Abu Bakar of Johor) பெயரிலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. பொதுபக்ரி நகரில் பல முசுலீம், சீன, இந்து மற்றும் கிறித்தவ கல்லறைகள் உள்ளன. அவற்றில் இரண்டாம் உலகப் போரின் சப்பானிய போர் கல்லறையும் உள்ளது. பக்ரி சுற்றுப்புறக் கிராமப் பகுதிகளில் நடந்த மூவார் போரில் 700-க்கும் மேற்பட்ட சப்பானிய போர் வீரர்கள் வீழ்த்தப்பட்டார்கள். அவர்களுக்காக சப்பானிய போர் கல்லறை பக்ரி நகரில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு சீனர்கள் அதிகமாக வாழ்கின்றனர். மேலும் இங்கு ஒரு சீனர்க் கோயில் உள்ளது. டு பூ டா ரென் (Du Fu Da Ren) எனும் சீனர்களின் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்தக் கோயில், சியாங் காங் சான் கோயில் என்று அழைக்கப்படுகிறது.[3] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia