பெந்தக்கோஸ்து

பெந்தக்கோஸ்து
தூய ஆவி பெருவிழா
கடைப்பிடிப்போர்கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம்
வகைChristian
முக்கியத்துவம்திருத்தூதர்கள் மீது தூய ஆவியின் வருகை
கொண்டாட்டங்கள்திருமுழுக்கு, உறுதிபூசுதல், குருத்துவம் முதலிய திருவருட்சாதனங்கள் நிறைவேற்றப்படலாம்..
அனுசரிப்புகள்இறைவேண்டல், திருவிழிப்பு, நோன்பு (விழாவுக்கு ஆயத்தமாக), நவநாள், தியானங்கள், திருப்பலி, மன்றாட்டு மாலை
நாள்Easter + 49 days
2024 இல் நாள்மே 19 (மேற்கில்)
சூன் 23 (கிழக்கில்)
2025 இல் நாள்சூன் 8 (மேற்கில்)
சூன் 8 (கிழக்கில்)
2026 இல் நாள்மே 24 (மேற்கில்)
மே 31 (கிழக்கில்)
தொடர்புடையனஉயிர்ப்பு ஞாயிறு

பெந்தக்கோஸ்து (பண்டைக் கிரேக்கம்Πεντηκοστή [ἡμέρα], Pentēkostē [hēmera]) என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழாவான பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் கொண்டாடப்பட்டது. பின்னாட்களில் கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டில், திருத்தூதர்களின் மீதும், கிறித்துவின் சீடர்கள் மீதும் (மொத்தம் 120 நபர்கள்[1]) தூய ஆவியின் வருகையினை நினைவு கூறும் விதமாக தூய ஆவி பெருவிழா என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழாவே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது.[2] விண்ணேற்ற விழாவுக்குப் பின் 10ஆம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

பெந்தக்கோஸ்து சபை இப்புதிய ஏற்பாட்டு நிகழ்விலிருந்தே தனது பெயரைப் பெறுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில், தூய ஆவியின் வருகை நிகழ்வு செபமாலையின் மகிமை மறைபொருள்களின் மூன்றாம் மறைபொருள் ஆகும்.

மேற்கோள்கள்

  1. 2:1–31
  2. Catholic Encyclopedia, Pentecost (Whitsunday)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya