மலேசிய கூட்டரசு சாலை 7
மலேசிய கூட்டரசு சாலை 7 அல்லது கூட்டரசு சாலை 7 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 7 அல்லது Federal Route 7; மலாய்: Laluan Persekutuan Malaysia 7 அல்லது Jalan Persekutuan 7) என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியின் முக்கிய கூட்டரசு சாலையாகும். இந்தச் சாலை பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் நகரம், மற்றும் கெடா மாநிலத்தின் அலோர் ஸ்டார் நகரம்; ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1] பொதுமலேசிய கூட்டரசு சாலை 7-இன் 0 கிலோமீட்டர் (Kilometre Zero), பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் நகரம் அருகே மலேசியா-தாய்லாந்து எல்லையில் தொடங்குகிறது. மலேசிய கூட்டரசு சாலை 7-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. இந்தச் சாலையில் மாற்று வழிகள் இல்லை; மற்றும் மோட்டார் சைக்கிள் பாதைகள் கொண்ட பிரிவுகள் எதுவும் இல்லை. பாடாங் பெசார்பாடாங் பெசார் நகரம், மலேசியா-தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. இதுவே மலேசியாவின் ஆக வடக்கே உள்ள நகரம். இதனை நாட்டின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பதும் உண்டு. கங்கார் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து அட் யாய் நகரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள உள்ளூர்வாசிகள் பாடாங் பெசார் நகரத்தை பெக்கான் சியாம் அல்லது சயாம் நகரம் என்றும் அழைக்கிறார்கள்.[2] இரு நாடுகளின் எல்லை சோதனைச் சாவடிகளுக்கு இடையில் இந்த நகரம் அமைந்து இருப்பதால், இந்த நகரத்தை கடைவலச் சொர்க்கம் என்றும் அடைமொழி பெற்று உள்ளது. மலேசியர்களின் பிரபலமான இடமாக விளங்கும் இந்த நகரம் ஒவ்வொரு வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.[3] மேலும் காண்கமேற்கோள்
வெளி இணைப்புகள்{{மலேசிய கூட்டரசு சாலைகள் (Main)} |
Portal di Ensiklopedia Dunia