1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மொண்ட்ரியால் நகரில் சூலை 17 முதல் ஆகத்து 1 வரை 1976ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XXI ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இதுவே கனடாவில் நடந்த முதல் ஒலிம்பிக் ஆகும். நியூசிலாந்தின் ரக்பி அணி தடைவிதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ததால் நியூசிலாந்தை இவ்வொலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகம் ஏற்காததால் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் இப்போட்டியை புறக்கணித்தன. செனிகலும் கோட் டிவாரும் இப் புறக்கணிப்பில் பங்கேற்க வில்லை. ஈராக்கும் கினியும் புறக்கணிப்பில் பங்கேற்றன. இப்புறக்கணிப்பை மக்கள் கொங்கோ குடியரசு தலைமையேற்று நடத்தியது. கயானா, மாலி, சுவாசிலாந்து ஆகியவை தொடக்க விழாவில் பங்கு பெற்று பின் காங்கோ தலைமையிலான புறக்கணிப்பில் பங்குபெற்றன. [1] இதற்கு தொடர்பற்ற இன்னொரு புறக்கணிப்பு சீன குடியரசால் நடத்தப்பட்டது. கனடா அரசு மக்கள் சீன குடியரசை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டதால் சீன குடியரசு என்ற பெயரில் போட்டியிட மறுப்பு தெரிவித்ததால் அந்நாடு போட்டியை புறக்கணித்தது. அந்தோரா, அன்டிகுவா பர்புடா (ஆண்டிகுவா என்ற பெயரில்), கேமன் தீவுகள், பப்புவா நியூ கினி ஆகியநான்கு நாடுகள் முதன்முதல் கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்குபெற்றன.
போட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவுஆம்ஸ்டர்டாம் நகரில் மே 2, 1970 ல் நடத்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 69 வது அமர்வில் மொண்டிரியால் தேர்வு பெற்றது[2].
பதக்கப் பட்டியல்போட்டையை நடத்தும் நாடு கனடா
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia