2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்![]() 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2014 Winter Olympics) அல்லது 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (22nd Winter Olympics) உருசியாவின் சோச்சி நகரில் 2014 பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23 வரை நடைபெற்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அயன அயல் மண்டல நகரமொன்றில் நடப்பது இதுவே முதல்முறையாகும். சூலை 4, 2007இல் குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கூடிய 119வது பன்னாட்டு ஒலிம்பிக் குழு மன்றத்தில் இங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டது.[2] 1980இல் மாஸ்கோ நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியுள்ள உருசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும். பங்கேற்கும் நாடுகள்வான்கூவரில் நடைபெற்ற கடைசி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 82 நாடுகள் பங்கேற்றிருந்தன; இதனை காட்டிலும் கூடுதலாக 88 நாடுகள் இங்கு விளையாடத் தகுதிபெற்று சாதனை படைத்துள்ளன.[3] ஏழு நாடுகள், டொமினிக்கா, மால்ட்டா, பரகுவை, கிழக்குத் திமோர், டோகோ, தொங்கா, மற்றும் சிம்பாப்வே, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்முறையாக விளையாடுகின்றன.[4] ![]()
இந்தியப் பங்கேற்புஇந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடைமுறைகள் குறித்த பிணக்கினால் திசம்பர் 2012இல் இந்தியா பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்தக் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியபோதும் இத்தேர்தல்கள் நடைபெறாத நிலை இருந்தது. எனவே இந்தியாவின் சார்பாக இப்போட்டிகளில் பங்கேற்கும் மூவர் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர். இவர்களது சாதனைகளும் சுயேச்சை ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் என பட்டியலிடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டது.[5][6] இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு நடைமுறைப்படி தேர்தல் நடந்தது. எனவே சோச்சியில் கூடிய பன்னாட்டு ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடையை நீக்கியது. இதனால் இந்திய வீரர்கள் இனி இந்தியக் கொடியை பயன்படுத்துவர். அவர்களது சாதனைகள் இந்தியாவின் கீழ் பட்டியலிடப்படும்.[7] ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்
விளையாட்டுக்கள்![]()
தொலைக்காட்சி ஒளிபரப்புதெற்காசியாவில் 7 நாடுகளில் நேரடி ஒளிபரப்பினை செய்வதற்குரிய உரிமையினை ஸ்டார் இண்டியா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. [8]
பதக்கப் பட்டியல்இறுதி பதக்கப் பட்டியல்:[9]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Sochi 2014 Olympic and Paralympic Games என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia