இந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம்
இந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம் (The Banking Codes and Standards Board of India) இந்தியாவில் வங்கிச் சேவைகளை நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சுதந்திரமான வங்கித் தொழில் கண்காணிப்பு அமைப்பாகும். "வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் கடமை நெறிகளை" வங்கிகள் கடைபிடிப்பதை மேற்பார்வையிடுகிறது. இது ஓர் ஈட்டுத்தொகை வழங்கும் அமைப்பல்ல; அமைப்புரீதியான கடைபிடிப்பு குறைபாடுகளை அடையாளம் காட்டுவதற்காகவே தனிநபர் குறைகளை கவனிக்கின்றது. பெப்ரவரி 18, 2006இல் சங்கங்களின் பதிவு சட்டம் 1860இன்படி சுதந்திரமான, தன்னாட்சி பெற்ற தனிச் சங்கமாக பதிவு செய்துள்ளது.[1] இந்த வாரியத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி முதல் ஐந்து ஆண்டுகளுக்கான செலவை ஏற்பதன் மூலம் நிதி ஆதரவு தந்துள்ளது.[2] முதன்மை நோக்கங்கள்
ஆட்சிக் குழாம்தலைவர் ஒருவருடன் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய ஆட்சிக் குழாமால் வாரியம் நிர்வகிக்கப்படுகிறது. உறுப்பினர்கள்பெப்ரவரி 2013 நிலவரப்படி, 69 பதிவுற்ற வணிக வங்கிகளும், 11 ஊரக கூட்டுறவு வங்கிகளும் 54 மண்டல் ஊரக வங்கிகளும் இந்த வாரியத்தில் உறுப்பினராக உள்ளன. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia