இந்தியத் துடுப்பாட்ட அணி 2017 சூலை முதல் செப்டம்பர் வரை இலங்கையில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒரு பன்னாட்டு இருபது20 போட்டியிலும் பங்குபற்றுகிறது.[ 1] [ 2] [ 3] தேர்வுப் போட்டிகளுக்கு முன்னதாக இரு அணிகளும் கொழும்பு நகரில் இரண்டு 2-நாள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடின.[ 4] [ 5] [ 6]
இலங்கை அணி சிம்பாப்வே அணியிடம் ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை அணியின் புதிய தேர்வுத் தலைவராக தினேஸ் சந்திமல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.[ 7] ஆனாலும், முதலாவது தேர்வுப் போட்டிக்கு முன்னதாக சந்திமல் நுரையீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவரால் விளையாட முடியவில்லை.[ 8] முதல் போட்டிக்கு ரங்கன ஹேரத் தலைமை தாங்கினார்.[ 9] தேர்வுத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்தியா தனது சுற்றுப் பயணம் ஒன்றில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுப் போட்டிகளில் விளையாடிப் பெற்ற முதலாவது வெள்ளையடிப்பு ஆகும்.[ 10]
பல்லேகலையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி இலங்கையின் 800வது ஒருநாள் போட்டியாகும்.[ 11] இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்றதை அடுத்தும்,. தொடரை வென்றது. இது இந்தியாவின் இலங்கைக்கெதிரான 8வது அடுத்தடுத்த தொடர் வெற்றியாகும்.[ 12] இத்தோல்வியை அடுத்தும், முன்னர் சிம்பாப்வே, வங்காளதேச அணிகளிடம் ஏற்பட்ட தோல்விகளையும் அடுத்து, இலங்கை அணியின் தெரிவுக்குழு கலைக்கப்பட்டது.[ 13] இந்த ஒரு-நாள் தொடரில் இந்தியா 5–0 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி உள்ளூரில் விளையாடி முதற்தடவையாக அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி கண்டது .[ 14] இ20ப போட்டித் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது.[ 15]
அணிகள்
முரளி விஜய் காயமடைந்ததை அடுத்து அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் விளையாடினார்.[ 18] அசெலா குணரத்தினா முதலாவது ஆட்ட நாளில் கையில் காயமேற்பட்டதை அடுத்து, ஏனைய ஆட்டங்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.[ 19]
தேர்வுத் தொடர்
1-வது தேவு
நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அர்திக் பாண்டியா (இந்), தனுஷ்க குணதிலக்க (இல) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
நுவான் பிரதீப் (இல) தனது முதலாவது 5-இலக்குகள் தேர்வுப் போட்டியில் கைப்பற்றினார்.[ 20]
ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[ 21]
இப்போட்டி இந்தியா வெளிநாடொன்றில் பெற்ற மிகப்பெரிய தேர்வு வெற்றியும், ஓட்டங்கள் அடிப்படையில் இலங்கையின் மிகப்பெரும் தோல்வியும் ஆகும்.[ 22]
2-வது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மலிந்த புஸ்பகுமார (இல) தனது முதலாவது தேர்வில் விளையாடினார்.
செதேஷ்வர் புஜாரா (இந்) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[ 23]
இலங்கையில் இந்தியா இன்னிங்சு ஒன்றினால் வெற்றி பெற்றது இதுவே முதல் தடவையாகும்.[ 24]
3-வது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இலக்சன் சந்தக்கன் (இல) தனது முதலாவது 5-தேர்வு இலக்குகளைக் கைப்பற்றினார்.[ 25]
ஒருநாள் தொடர்
1-வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
விசுவா பெர்னாண்டோ தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
லசித் மாலிங்க (இல) தனது 200வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[ 26]
2-வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
மழை காரணமாக இந்திய அணியி வெற்றி இலக்கு 47 ஓவர்களுக்கு 231 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது .
இவ்வாட்டம் இலங்கையின் 800-வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியாகும்.[ 11]
அகில தனஞ்சயா (இல) தனது முதலாவது 5-இலக்குஅக்ளை ஒருநாள் போட்டியில் பெற்றார்.[ 27]
3-வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
சமர கப்புகெதர இப்போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கினார்.[ 28]
யசுப்பிரித் பம்ரா (இந்) ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது 5-இலக்குகளைக் கைப்பற்றினார்.[ 12]
இவ்வெற்றியுடன், இந்திய அணி இத்தொடர்ப் போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து எட்டாவது தொடர் ஒரு-நாள் வெற்றியைப் பதிவு செய்தது.[ 12]
4-வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
தில்சான் முனவீர, மலிந்த புஷ்பகுமார, (இல), சர்துல் தாக்கூர் (இந்) தமது 1வது பன்னாட்டு ஒரு-நாள் போட்டியில் விளையாடினர்.
லசித் மாலிங்க இப்போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கினார்.
மகேந்திரசிங் தோனி (இந்) தனது 300வது ஒரு-நாள் போட்டியில் விளையாடினார்.[ 29] [ 30]
லசித் மாலிங்க (இல) தனது 300வது ஒரு-நாள் இலக்கைக் கைப்பற்றி, இலங்கை அணியில் இவ்விலக்கை எட்டிய 4வது வீரரானார்.[ 31]
இவ்வாட்டம் இலங்கை ஒரு-நள் போட்டியில் இலங்கையில் விளையாடி தோற்ற மிகப்பெரிய தோல்வியாகும்.[ 32]
5-வது ஒருநாள்
எ
விராட் கோலி 110* (116) வனிந்து அசரங்க 1/29 (4.3 ஓவர்கள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
புவனேசுவர் குமார் (இந்) தனது முதலாவது ஒருநாள் 5-இலக்குகளைக் கைப்பற்றினார்.[ 14]
விராட் கோலி (இந்) தனது 30வது ஒருநாள் சதங்கள் எடுத்தார்.[ 14]
இ20ப தொடர்
எ
தில்சான் முனவீர 53 (29) யுசுவேந்திரா சாகல் 3/43 (4 ஓவர்கள்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
அசான் பிரியஞ்சன் (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
விராட் கோலி (இந்) 50வது இ20ப போட்டியில் விளையாடினார்.[ 33]
மேற்கோள்கள்
↑ "Future Tours Programme" (PDF) . International Cricket Council . Retrieved 16-01-2016 .
↑ "India to play 3 Tests, 5 ODIs and 1 T20I in Sri Lanka" . Cricbuzz . Retrieved 7-07-2017 .
↑ "India's next away Test in Galle on July 26" . ESPN Cricinfo . Retrieved 7-07-2017 .
↑ "Pandya earns Test call-up, Rahul back" . ESPN Cricinfo . Retrieved 9-07-2017 .
↑ "India team for the Test series against Sri Lanka" . Wisden India . Archived from the original on 2017-07-13. Retrieved 9-07-2017 .
↑ "India tour of Sri Lanka, 2017" . Cricket Buzz . Retrieved 10-07-2017 .
↑ "Chandimal to lead SL in Tests, Tharanga in shorter formats" . ESPN Cricinfo . Retrieved 12-07-2017 .
↑ "Chandimal ruled out of Galle Test" . ESPN Cricinfo . Retrieved 21-07-2017 .
↑ "Herath to skipper SL against India" . Cricket Australia . Retrieved 21-07-2017 .
↑ "A rare clean sweep away from home" . ESPN Cricinfo . Retrieved 14-08-2017 .
↑ 11.0 11.1 "Onus on youngsters to lift Sri Lanka out of the pits" . ESPN Cricinfo . Retrieved 24-08-2017 .
↑ 12.0 12.1 12.2 "India's eighth consecutive bilateral ODI series win against SL" . ESPN Cricinfo . 27 August 2017. http://www.espncricinfo.com/story/_/id/20477495/ .
↑ "Sri Lanka selectors resign after defeats to India" . ESPN Cricinfo . 29-08-2017. http://www.espncricinfo.com/srilanka/content/story/1118286.html . பார்த்த நாள்: 29-08-2017 .
↑ 14.0 14.1 14.2 "Bhuvneshwar, Kohli lead India to 5-0 sweep" . ESPN Cricinfo . 3-09-2017. http://www.espncricinfo.com/sri-lanka-v-india-2017/content/story/1119227.html . பார்த்த நாள்: 3-09-2017 .
↑ "Kohli, Pandey lead the way as India complete 9-0 sweep" . ESPN Cricinfo . 6-09-2017. http://www.espncricinfo.com/sri-lanka-v-india-2017/content/story/1119634.html . பார்த்த நாள்: 6-09-2017 .
↑ "Sri Lanka announces squad for first Test against India" . Sri Lanka Cricket . Archived from the original on 2017-08-01. Retrieved 23-07-2017 .
↑ "Pandya in squad for SL Tests, Rahul back" . ESPN Cricinfo . Retrieved 9-07-2017 .
↑ "Dhawan to replace injured Vijay for Sri Lanka" . ESPN Cricinfo . Retrieved 17 July 2017 .
↑ "Gunaratne out of India series" . ESPN Cricinfo . Retrieved 26-07-2017 .
↑ "Pradeep takes five, but India surpass 500" . ESPN Cricinfo . Retrieved 27-07-2017 .
↑ "R Ashwin plays in his 50th Test" . The Indian Express . Retrieved 29-07-2017 .
↑ "India's biggest away win, SL's biggest defeat" . ESPN Cricinfo . http://www.espncricinfo.com/ci/content/story/1113157.html . பார்த்த நாள்: 29-07-2017 .
↑ "Rahul set for return as India aim to close out series" . ESPN Cricinfo . Retrieved 2-08-2017 .
↑ "India's first innings win in Sri Lanka" . ESPN Cricinfo . http://www.espncricinfo.com/story/_/id/20264558/india-first-innings-win-sri-lanka . பார்த்த நாள்: 5-08-2017 .
↑ "Pandya's maiden ton headlines 15-wicket day" . ESPN Cricinfo. Retrieved 13-08-2017 .
↑ "Lasith Malinga set for 200th ODI for Sri Lanka, 2 short of 300 wickets" . Hindustan Times . Retrieved 20-08-2017 .
↑ "Dhoni, Bhuvneshwar trump Dananjaya's 6 for 54" . ESPN Cricinfo . Retrieved 24-08-2017 .
↑ "Sri Lanka, new leader in tow, look to keep series alive" . ESPN Cricinfo . Retrieved 27-08-2017 .
↑ "India could test bench strength in fourth ODI" . International Cricket Council . Retrieved 31-08-2017 .
↑ "Kohli and Rohit's flourishing partnership" . ESPN Cricinfo. Retrieved 31-08-2017 .
↑ "Lasith Malinga completes 300 ODI wickets after dismissing Virat Kohli" . Hindustan Times . Retrieved 31-08-2017 .
↑ "Kohli, Rohit smash hundreds in crushing victory" . ESPN Cricinfo. Retrieved 31-08-2017 .
↑ "Virat Kohli-led India aim to outclass Sri Lanka in lone T20, end tour on a high" . Hindustan Times . Retrieved 6-09-2017 .
வெளி இணைப்புகள்