ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)
ஒரு வீடு இரு வாசல் (Oru Veedu Iru Vasal) 1990 இல் வெளியான இந்திய தமிழ்த் தொகைத் திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யாமினி, வைஷ்ணவி, சூர்யா, கணேஷ், குமரேஷ் நடித்துள்ளனர்.[2] இத்திரைப்படம் இரு தனித்தனிக் கதைகளைக் கொண்டது. இரண்டிற்குமான இணைப்பு படத்தின் இறுதியில் காட்டப்படுகிறது. மூலக்கதை தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய புதினமாகும். 38 ஆவது தேசிய திரைப்பட விழாவில் இத்திரைப்படம் பிற சமூகப் பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. கதைக் கருஇத்திரைப்படம் இரு தனிக்கதைகளை உள்ளடக்கியது. இரு கதைகளும் ஆணாதிக்கமிக்க இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சித்தரிக்கிறது. இரு கதைகளின் நாயகிகளும் தங்கள் கணவர்களால் படும் துன்பங்களை ஒரு எல்லைக்கு மேல் தாங்க முடியாமல் தங்களுக்கான வாழ்க்கைப் பாதையைத் துணிவுடன் தேர்ந்தெடுக்கின்றனர். நடிகர்கள்
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia