காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில்
காஞ்சிபுரம் மகா ஆனந்த ருத்ரேசர் கோயில் (ஆனந்த ருத்ரேசம்) என்று அறியப்படும் இக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இறைவன் ருத்ரேசரின் மீது சிவஞான யோகிகள் பாடிய நூல் கச்சிஆனந்தருத்திரேசர் பதிகமாகும்.[1] கவிராட்சசர் கச்சியப்ப முனிவர் இத்தல இறைவன் மீது வண்டுவிடு தூது, ஆனந்த ருத்திரேசர் கழிநெடில், ஆனந்த ருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். தல வரலாறுவரலாற்று சுருக்கம்
அமைவிடம்இந்தியாவின் தென்கடை மாநிலமான தமிழ்நாட்டின் வடக்கோடி மாவட்டங்களில் ஒன்றான மாவட்டத்தின் தலைநகரான சிவகாஞ்சி என்றழைக்கப்படும் பெரிய காஞ்சிபுரத்தின் மேற்கு பிராந்தியமான பிள்ளையார் பாளையம் எனும் பகுதியில் சேர்மேன் சாமிநாத முதலியார் வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து மேற்கே 1½ கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia