காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் (எமதரும லிங்கேசம்) என அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுஇங்கே எமதர்மர் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டார். மகிழ்ந்த இறைவன் எமதருமனுக்கு காட்சி தந்து, தென்றிசைக்கு கடவுளாகும் காவலையும் தந்து, அத்துடன் "தம்மை வணங்கும் அடியார்களையும் தண்டிக்கலாகாது" என பணித்தார் என்பது இத்தல வரலாறு.[2] தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்கு பகுதியில் வேகவதி ஆற்றின் கரையில் பிள்ளையார்பாளையம் தாயார் குளத்தின் மேற்குக் கரையில் எமதரும லிங்கேசம் காயாரோகணத்தின் அருகில் உள்ளது மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு 2 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.[4] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia