காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில்

காஞ்சிபுரம் ஐராவதேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் ஐராவதேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐராவதேசர்.

காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் (ஐராவதேசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், பல்லவர்கள் கட்டிய கோவிலாக கருதப்படும் இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

இத்தல இவ்விறைவனை ஐராவதம் வழிபட்டு, இந்திரனைத் தாங்குகின்ற வரம் பெற்றது, தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அக்கடலில் தோன்றிய வெள்ளை யானையாகிய ஐராவதம் இந்திரனைத் தாங்குதற்குப் பூஜித்த தலமாக இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது.[2]

தல விளக்கம்

ஐராவதேசம் எனும் இது, நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்னும் வெள்ளையானை, சிவலிங்கம் நிறுவி ஐராவதேசர் என்னும் அப்பெருமானைப் பூசனை புரிந்து யானைகட்குத் தலைமையாகவும், இந்திரன் ஊர்தியாம் நிலைமையையும் பெற்றது. இத்தலம் இராஜவீதியும் நெல்லுக்காரத் தெருவும் கூடுமிடத்தில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது.[3]

தல பதிகம்

  • பாடல்: (ஐராவதேசம்)
அத்த ளிக்குட பாலதன் றிமையவர் கடைபோ
தத்தி மேலெழும் வெண்கரி அருச்சனை ஆற்றி
அத்தி கட்கர சாகிவிண் அரசினைத் தாங்க
அத்த னார்அருள் பெறும்அயி ராவதேச் சரமால்.
  • பொழிப்புரை:
தேவர்கள் திருப்பாற் கடலைக்கடைந்த அந்நாளில் அக்கடலில்
தோன்றிய ஐராவதம் எனப்பெறும் வெள்ளையானை அருச்சனை செய்து
யானைகளுக்கு எல்லாம் அரசு என்னும் தெய்வத்தன்மை பெற்று இந்திரன்
ஊர்தியாகச் சிவபிரானை அருச்சித் தருள் பெறும் ஐராவதேசம்
அபிராமேசத்திற்கு மேற்குத்திசையில் உள்ளது..[4]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் மேலாண்டை இராசவீதி எனப்படும் மேற்கு ராஜவீதியின் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு வடகிழக்கு தெங்கோடியில் சாலைக்கு கீழ்பால் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், மேற்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் பாகம் 1b | 20 அரிசாப பயம் தீர்த்த தானப் படலம் 840 - 863 |862 ஐராவேதசம.
  2. "shaivam.org | ஐராவதேசர் திருக்கோயில்". Archived from the original on 2016-08-08. Retrieved 2016-03-11.
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | ஐராவதேசம் | பக்கம்: 818.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | அரிசாபபயந்தீர்த்ததானப் படலம் | ஐராவதேசம் பாடல் 23 | பக்கம்: 265
  5. "palsuvai.ne | காஞ்சிபுர சிவலிங்கங்கள் | 52. ஸ்ரீ ஜராவதேஸ்வரர் (பேட்டை)". Archived from the original on 2016-06-29. Retrieved 2016-03-11.

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya