காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் (சந்திரேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், சந்திரனுக்கு சோமன் என்ற மற்றொரு பெயருடனும் விளங்குவதால்; காஞ்சிப் புராணத்தில் இக்கோயில் சோமேச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள் பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்தல வரலாறு
தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிற்கு அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் பாதையில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia