காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் (மதங்கேசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். மேலும், நந்திவர்ம பல்லவன் காலத்தியது. மிகவும் பழமையான இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுமதங்க முனிவர் இப்பெருமானை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலைப் பெற்றார் என்று இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது.[2] தல விளக்கம்மதங்கேசம் எனும் இது, ஐம்புலக் குறும்புகளை அடக்கவேண்டி மதங்க முனிவர் அருச்சித்த மதங்கேசர் கோயில் மதங்கேசர் தெரு மிசின் மருத்துவமனைக் கெதிரில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது. பல்லவர்காலச் சிற்பங்கள் அமைந்து அரசியலால் காக்கப்படுகிறது.[3] தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில் மதங்கீஸ்வரர் கோயில், பெரிய காஞ்சிபுரத்தில் ஆசுபிடல் ரோடு மிசின் மருத்துவமனைக்கு வடகிழக்கில் சாலைக்கு வடவண்டையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் கிழக்கு திசையில், மேற்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[5] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia