காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் (மாண்டகன்னீசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ளசிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், காமாட்சி அம்மன் தபசு செய்யும் இடமாக அறியப்பட்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
மாண்டகன்னி முனிவர் காஞ்சியில் தம் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு தேவமகளிர் ஐவருடனும் இம்மண்ணுலகில் போகத்தை நன்கு அனுபவித்து, அதன்பின்பு வெறுப்புற்று, இறுதியில் முத்திப்பேற்றை அடைந்தார். மேலும், மாண்டுகன்னி முனிவர் அம்மையில் தேவருலகில் அரம்பையரோடு வாழும்பகத்தை இம்மையில் இப்பிறப்பிற்றானே அவ்வரம் பையரோடு கூடி அனுபவிக்க வேண்டி பூஜித்த தலம் என்பது வரலாறு.[2]
தல விளக்கம்
மாண்டகன்னீசம் எனும் இது, அழகிய காதர் என்னும் பொருள் தரும் மாண்ட கன்னி முனிவர் ‘மாண்ட கன்னீசர்’ எனப் பெரிய சிவலிங்கம் நிறுவிப் போற்றித் திருவருள் வலத்தால் விண்ணுலகத்தில் வைத்து நுகரவேண்டிய தேவபோகத்தை இந்திரனும் (போகியும்) நாணுமாறு இக்காஞ்சியில் ஐந்து அரம்பையரைக் கொணர்ந்து மணந்து நுகர்ந்து வாழ்ந்தனர். அவர் நாளும் நீராடிய நீர்நிலை ‘ஐயரம்பையர் தீர்த்தம்’ என்றானது. முனிவர் நெடுங்காலம் போகம் நுகர்ந்து உவர்த்து முடிவில் முத்தியைப் பெற்றனர்.[3]