1967-ல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 189 பேர் பொதுத் தொகுதிகளிலிருந்தும் 45 பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
அரசியல் நிலவரம்
1962 சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறை முதலமைச்சராக வெற்றி பெற்ற காமராஜர் இந்திய முழுவதும் காங்கிரசு வலுவிழக்கத் தொடங்கியது.
இதனால் (1954-1963) முதல் ஒன்பது வருடங்களாக முதல்வராக இருந்த காமராஜர் தான் வகித்திருந்த முதலமைச்சர் பதவியில் இருந்து தாமகவே விலகி அவர் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டு தில்லி சென்று விட்டார்.
காமராசருக்கு பதிலாக தமிழக முதல்வரான பக்தவத்சலத்திடம் காமராஜரிடமிருந்த மக்கள் செல்வாக்கு இல்லை.
மேலும் 1964-ல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் காங்கிரசு அரசு மக்களின் நம்பிக்கையின்மையையும் எதிர்ப்பையும் பெற்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது.[2]
1964ஆம் ஆண்டு காங்கிரசின் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு இந்தியா மற்றும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி பலமான சரிவை சந்தித்து.
இதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி, 1965 வரை ஆங்கிலமும், இந்தியும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென தமிழகத்தில் பலர் கருதினர்.
இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தி தனி ஆட்சி மொழியாவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1965-ல் சனவரி-பிப்ரவரி-களில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறைச் செயல்கள் மிகுந்தன. மாநில காங்கிரசும், முதல்வர் பக்தவத்சலமும்இந்தியை ஆதரித்து, அதற்கெதிரான போராட்டத்தைக் கடுமையான முறைகளைக் கையாண்டு ஒடுக்கினர்.
இதனால், பெருவாரியான பொதுமக்கள் காங்கிரசின் மீது வெறுப்பும், அதிருப்தியும் கொண்டனர்.[3]
முந்தைய தேர்தலில் ஒற்றுமையில்லாமல் இருந்த எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தின் மூலம் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் வந்தது. அரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.[4][5] தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களை விமர்சித்து மக்களிடையே நினைவுபடுத்தும் வகையில் “காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” போன்ற முழக்கங்களை திமுகவினர் பயன்படுத்தினர்.
இத்தேர்தலில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக பிப்ரவரி 5 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.[14][15] 76.57% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசு கட்சி 51 இடங்களைக் கைப்பற்றியது.[16] நாம் தமிழர் மற்றும் தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.[17][18][19]
திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதல் முறை. நாற்பதாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இத்தேர்தலில் அன்றைய தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். முதல்வராயிருந்த பக்தவத்சலம்ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், காங்கிரசு தலைவர் காமராஜர்விருதுநகர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.[21][22][23] எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை, திமுகவின் தேர்தல் பிரச்சாரம், அண்ணாதுரையின் அரசியல் நுட்பம் ஆகியவையே திமுக கூட்டணியின் வெற்றிக்குக் காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இக்கூட்டணி அப்போது தமிழகத்திலிருந்த பதினான்கு மாவட்டங்களில் பத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரசால் ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுக நகர்ப்புறங்களில் தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்ததுடன், கிராமப் புறங்களிலும் முதல் முறையாகக் காலூன்றியது. காங்கிரசின் தோல்விக்கு அக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவை இழந்ததும் முக்கிய காரணமாகும்[20]
கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள், வாக்கு வேறுபாடுகள் ஆகியவை கீழ்காணும் பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளன.[20]
கட்சி
< 500
500-1000
1000-3000
3000-5000
5000-10000
10000-20000
20000+
திமுக
3
1
10
9
42
56
17
சுதந்திரா
—
—
5
1
5
8
1
காங்கிரசு
5
5
20
10
5
3
1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
—
—
1
1
4
4
1
ஆட்சி அமைப்பு
தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகின. திமுக தலைவர் அண்ணாதுரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தென் சென்னைத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பதவித்துறப்பு (ராஜினாமா) செய்து விட்டு, மார்ச் 6 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 22 ஏப்ரலில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மேலவை உறுப்பினரானார்.[10][24][25][26]
அண்ணாதுரை அமைச்சரவை
திமுக அமைச்சரவையில் 6 மார்ச் 1967 இலிருந்து 10 பிப்ரவரி 1969 வரை இடம் பெற்றிருந்த அமைச்சர்கள்[27]