செருமேனியம் நான்குபுளோரைடு
செருமேனியம் நான்குபுளோரைடு (Germanium tetrafluoride) என்பது GeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட செருமேனியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு முறைகள்நிறமற்ற வாயுவான இதை செருமேனியம் ஈராக்சைடுடன் (GeO2) ஐதரோ புளோரிக் அமிலம் (HF) சேர்த்து வினைபுரியச் செய்து அல்லது செருமேனியத்துடன் புளோரின் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம். Ge + 2 F2 → GeF4 Ba[GeF6] என்ற அணைவு உப்பு வெப்பச்சிதைவுக்கு உட்படும்போதும் செருமேனியம் நான்குபுளோரைடு உருவாகிறது.[2] Ba(GeF6) → GeF4 + BaF2 பண்புகள்செருமேனியம் நான்குபுளோரைடு எளிதில் தீப்பற்றாமல் பூண்டு மணத்துடன் நன்றாக புகையக்கூடிய ஒரு வாயுவாகும். தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் செருமேனியம் ஈராக்சைடு ஆகியனவற்றை உருவாக்குகிறது.1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மூலக்கூற்றுச் சிதைவுறுதல் நிகழ்கிறது.[3] பயன்கள்இருசிலேனுடன் செருமேனியம் நான்குபுளோரைடைச் சேர்த்து சிலிக்கந்செருமேனியம் (SiGe) சேர்மத்தை தொகுப்பு முறையில் தயாரிக்கலாம் [1] செருமேனியம் நான்குபுளோரைடுடன் தூளாக்கப்பட்ட செருமேனியத்தைச் சேர்த்து 150-300 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் [4] செருமேனியம் இருபுளோரைடைத் தயாரிக்கமுடியும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia