நியோடிமியம் ஆக்சிகுளோரைடு

நியோடிமியம் ஆக்சிகுளோரைடு
Neodymium oxychloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடிமியம் ஆக்சைடு குளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/ClH.Nd.O/h1H;;/q;+3;-2/p-1
    Key: AANUWLYYJMIHDX-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 172678238
  • [Nd+3].[O-2].[Cl-]
பண்புகள்
NdOCl
வாய்ப்பாட்டு எடை 195.69 கி/மோல்
தோற்றம் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4/nmm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம் ஆக்சிகுளோரைடு (Neodymium oxychloride) என்பது NdOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியம், ஆக்சிசன், குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நியோடிமியம் ஆக்சைடு குளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1]

தயாரிப்பு

நியோடிமியம்(III) ஆக்சைடுடன் (Nd2O3) கால்சியம் குளோரைடு (CaCl2) சேர்த்து வினைபுரியச் செய்தால் நியோடிமியம் ஆக்சிகுளோரைடு உருவாகும்.[2]

Nd2O3 + CaCl2 -> 2NdOCl + CaO[3]

இயற்பியல் பண்புகள்

P4/nmm என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிகத் திட்டத்தில் நியோடிமியம் ஆக்சிகுளோரைடு படிகமாகிறது.[4][5][6]

இச்சேர்மம் பாரா காந்த உணர்திறன் மற்றும் கட்டமைப்பு நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

வேதிப் பண்புகள்

உயர் வெப்பநிலை மின்னாற்பகுப்பு மூலம், குறிப்பாக FFC (பிரே-பார்திங்-சென்) செயல்முறைக்குள், நியோடிமியம் ஆக்சிகுளோரைடை உலோக நியோடிமியமாகக் குறைக்க முடியும்.[1]

NdOCl + 1.5Ca → Nd + CaO + 0.5CaCl2[7]

பயன்கள்

உலோக நியோடிமியத்தைப் பிரித்தெடுப்பதற்கான ஒரு எதிர்மின்வாய்ப் பொருளாக நியோடிமியம் ஆக்சிகுளோரைடு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Song, Jianxun; Li, Shaolong; Che, Yusi; Fan, Yong; Jiao, Handong; Shu, Yongchun; He, Jilin (1 November 2020). "Synthesis and characterization of neodymium oxychloride". Journal of Materials Research and Technology 9 (6): 16378–16386. doi:10.1016/j.jmrt.2020.11.035. பன்னாட்டுத் தர தொடர் எண்:2238-7854. https://www.sciencedirect.com/science/article/pii/S2238785420320019. பார்த்த நாள்: 5 July 2025. 
  2. Song, Jianxun; Guo, Muxing; Mukherjee, Abhishek; Blanpain, Bart; Fransaer, Jan (10 December 2017). "Extraction of neodymium by direct reduction of NdOCl in molten calcium chloride". Electrochimica Acta 257: 465–472. doi:10.1016/j.electacta.2017.10.103. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-4686. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0013468617322259. பார்த்த நாள்: 5 July 2025. 
  3. Mamantov, Gleb (1987). Proceedings of the Joint International Symposium on Molten Salts (in ஆங்கிலம்). Electrochemical Society. p. 848. Retrieved 5 July 2025.
  4. Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 603. Retrieved 5 July 2025.
  5. Report [of] Joint Committee Fellowship [on] Standard X-ray Diffraction Powder Patterns to Joint Committee on Chemical Analysis by Powder Diffraction Methods (in ஆங்கிலம்). United States National Bureau of Standards. 1951. p. 24. Retrieved 5 July 2025.
  6. National Bureau of Standards Circular (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, National Bureau of Standards. 1959. p. 37. Retrieved 5 July 2025.
  7. Krishnamurthy, Nagaiyar (20 December 2004). Extractive Metallurgy of Rare Earths (in ஆங்கிலம்). CRC Press. p. 262. ISBN 978-0-203-41302-9. Retrieved 5 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya