2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் வாழும் பட்டியல் சமூக மக்கள் வாழிடங்களின் வரைபடம்[1]பஞ்சாப் மாநில மக்கள் தொகையில் தலித் மக்கள் 32% ஆக உள்ளனர். ஆனால் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இரண்டு வடகிழக்கு மாநிலங்களில் தலித் மக்கள் அறவே இல்லை[1]இந்தியாவில் பழங்குடி இன மக்கள் வாழுமிடங்கள்[1] பழங்குடியின மக்கள் மிக அதிக அளவு கொண்ட வடகிழக்கு மாநிலங்கள், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்கள். பழங்குடி மக்கள் இல்லாத பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள்.[1]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தாலுகா வாரியாக, இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் சதவீதம்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes)[2] என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, ஆண்டு 1950இன் படி, இந்தியாவில் 1,108 பட்டியல் சாதிகளையும்,[4] 744 பட்டியல் பழங்குடியினங்களையும் அடையாளம் கண்டுள்ளது.[5]
கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு
பட்டியல் மக்கட்தொகைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் பட்டியல் சாதி மக்களுக்கு 15% இட ஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடும் வழங்கியுள்ளது.[6][7]
பட்டியல் மக்கள் நலன் மேம்படுத்த அரசின் நடவடிக்கைகள்
பட்டியல் சாதி மக்கள், பட்டியல் பழங்குடி மக்களின் நலன் காக்க இந்திய அரசியலமைப்பு மூன்று உத்திகளை இந்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வலியுறுத்துகிறது.[10] அவைகள்:
பாதுகாப்பு:தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்ட நடவடிக்கைகள் மூலம் பட்டியல் மக்கள் நாட்டில் சமத்துவத்துடன், பாதுகாப்புடன், மரியாதையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.
இடஒதுக்கீடு: உள்ளாட்சி அமைப்புகள், மத்திய மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டை சட்டப்படி கடைப்பிடிக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேம்பாடு: வளங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கி, சமூக, பொருளாதாரத்தில் பட்டியல் மக்களுக்கும், பிற மக்களுக்கும் இடையே நட்பு பாலமாக விளங்க வகை செய்ய வேண்டும்.[11]
தேசிய ஆணைக் குழுக்கள்
பட்டியல் மக்களின் நலன் காத்திட இந்திய அரசு, அரசியல் அமைப்பு சட்டப்படி இரண்டு சட்டபூர்வமான ஆணையங்கள் ஏற்படுத்தியுள்ளது.
பட்டியல் மக்களின் மனித உரிமைகளை காத்திட, இவ்விரு ஆணையத்தின் தலைவர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிமுறை உறுப்பினர்களாக செயல்படுகின்றனர்.
பட்டியல் மக்களுக்கான அரசுத்துறைகள்
பட்டியல் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு தனி அமைச்சகம் அமைத்துள்ளது.[14]
பட்டியல் சாதி மக்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு தனி அமைச்சகம் அமைத்துள்ளது.[15][16]
அனைத்து மாநில அரசுகளும் பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடியினர் நலத்துறைகள்.[17]
சமய வாரியாக பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மக்கட்தொகை
இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1990இன் படி, (Constitution (Scheduled Castes) Orders (Amendment) Act, 1990) பட்டியல் சாதியினர் இந்து, சீக்கியம், அல்லது பௌத்த சமயத்தை மட்டும் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.[18][19] பட்டியல் பழங்குடியினர்கள் எச்சமயத்தையும் சார்ந்தவராகவும் இருக்கலாம்.[20][21] 61வது சுற்று தேசிய புள்ளியியல் சர்வே அறிக்கையின்படி, இந்தியாவில்பௌத்த சமய மக்கட்தொகையில் 90%, சீக்கிய சமய மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கும், கிறித்தவ மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பட்டியல் பழங்குடியினர் உள்ளனர்.[22][23]
Srivastava, Vinay Kumar; Chaudhury, Sukant K. (2009). "Anthropological Studies of Indian Tribes". In Atal, Yogesh (ed.). Sociology and Social Anthropology in India. Indian Council of Social Science Research/Pearson Education India. ISBN9788131720349.