மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதி (Maldaha Uttar Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய மக்களவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மால்டா மக்களவைத் தொகுதி 2009இல் நீக்கப்பட்டது. மால்தாக வடக்கு மற்றும் மால்தாக தெற்கு என இரு மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.[2]
சட்டமன்றத் தொகுதிகள்
மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண் 7) பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]