வங்காளதேசத் துடுப்பாட்ட அணி 2021 ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையில் இரண்டு தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியது.[1] தேர்வுப் போட்டிகள் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக அமைந்தன.[2]
ஆரம்பத்தில், மூன்று-தேர்வுப் போட்டித் தொடராக 2020 சூலை-ஆகத்து மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டு,[3][4] பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 அக்டோபருக்கு மாற்றப்பட்டது.[5] 2020 செப்டம்பரில், மீண்டும் முடிவு செய்யப்பட்டது.[6][7] 2020 திசம்பரில், வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் 2021 ஏப்ரலில் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்தது.[8] 2021 பெப்ரவரியில் இப்பயணம் உறுதி செய்யப்பட்டது.[9] 2021 மார்ச் 19 இல் இலங்கை துடுப்பாட்ட வாரியம் சுற்றுக்கான தேதிகளை அறிவித்தது.[10]
முதல் தேர்வுப் போட்டி மிக அதிகமான ஓட்டங்கள் பெற்ற நிலையில் வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்தது.[11][12] இரண்டாவது போட்டியை இலங்கை அணி 209 ஓட்டங்களால் வெற்றி பெற்று, 1–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.[13]
அணிகள்
பயிற்சிப் போட்டி
ஆட்டம் சமநிலையில் நிறைவுசிலாபம் மரியன்சு அரங்கு, கட்டுநாயக்கா
|
- நாணயச்சுழற்சி மேற்கொள்ளப்படவில்லை
தேர்வுத் தொடர்
1-வது தேர்வு
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 2-ம் நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மையால் 25 ஓவர்கள் விளையாடப்படவில்லை. 5-ஆம் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக தேநீர் இடைவேளையுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- நஸ்முல் உசைன் சாந்தோ (வங்) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[16]
- திமுத் கருணாரத்ன (இல) தனது முதலாவது இரட்டைத் தேர்வுச் சதத்தைப் பெற்றார்.[17]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இலங்கை 20, வங்காளதேசம் 20.
2-வது தேர்வு
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 2-ஆம் நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மையால் 24.1 ஓவர்கள் விளையாடப்படவில்லை.
- பிரவீன் ஜயவிக்கிரம (இல), சோரிபுல் இசுலாம் (வங்) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- திமுத் கருணாரத்ன தேர்வுப் போட்டிகளில் இலங்கைக்காக 5,000 ஓட்டங்களை எடுத்த 10-வது மட்டையாளர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[18]
- பிரவீன் ஜயவிக்கிரம முதல் தேர்வுப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய ஐந்தாவது இலங்கைப் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் புரிந்தார்.[19]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இலங்கை 60, வங்காளதேசம் 0.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்