விருமாண்டம்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி வட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம்[4][5]. இது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். இதில் விருமாண்டம்பாளையம், தில்லைகுட்டைபாளையம், பெரியக்காபாளையம், மல்லிபாளையம், ஒட்டுவிளாங்காடு, கீழேரிப்பதி, நொச்சிக்காடு, ஒத்தைப்பனைமேடு, சடையம்பதி, அம்மாபாளையம், கருக்குப்பாளையம், பொரசுப்பாளையம், கருக்கன்கூட்டம், அம்மன்கோவில்புதூர் போன்ற ஊர்கள் உள்ளன. விருமாண்டம்பாளையம் ஊராட்சியில் மூன்று தொடக்கப்பள்ளிகள் விருமாண்டம்பாளையம், அம்மாபாளையம் மற்றும் கீழேரிப்பதி என்ற ஊர்களில் அமைந்துள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்றும் விருமாண்டம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரீமியர் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. விருமாண்டம்பாளையம், செங்கப்பள்ளி-கோபிசெட்டிபாளையம் மாநிலச் சாலையில் அமைந்துள்ளது. செங்கப்பள்ளி மற்றும் குன்னத்தூர் ஆகியவை அருகில் உள்ள பெரிய ஊர்கள் ஆகும்.
மேற்கோள்கள்