அலோர் ஸ்டார் மாநகராட்சி
அலோர் ஸ்டார் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Alor Setar; ஆங்கிலம்: Alor Setar City Council); (சுருக்கம்: MBAS) என்பது மலேசியா, கெடா, மாநிலத்தில் அலோர் ஸ்டார் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் கெடா மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.[1] அலோர் ஸ்டார் மாநகராட்சியின் அதிகார வரம்பு 333 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி, கெடாவில் உள்ள கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District); மற்றும் பொக்கோக் சேனா மாவட்டம் (Pokok Sena District) ஆகிய இரு மாவட்டங்களை நிர்வகிக்கிறது. கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் தான் அலோர் ஸ்டார் மாநகரமும் உள்ளது. பொது2003 டிசம்பர் 21-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நகரத் தகுதி வழங்கப்பட்ட பிறகு அலோர் ஸ்டார் நகராட்சி நிறுவப்பட்டது. அலோர் ஸ்டார் மாநகராட்சியின் முதல்வர் (மேயர்); மற்றும் அதன் 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் கெடா மாநில அரசாங்கம் ஓராண்டு காலத்திற்கு நியமிக்கிறது. மேற்சொன்ன அலோர் ஸ்டார் மாநகராட்சியின் பொறுப்புகள் அனைத்தும் நியமனப் பொறுப்புகளாகும். பொதுவாக மற்ற எல்லா மாநகராட்சிகளைப் போலவே இந்த மாநகராட்சியும் பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது. வரலாறுஅலோர் ஸ்டார் சுகாதார வாரியம் (Alor Star Sanitary Board) 1905-இல் நிறுவப்பட்டது. இந்த வாரியம் 1958-இல் அலோர் ஸ்டார் ஊராட்சி வாரியமாக (Alor Star Municipal Board) மாறியது. பின்னர் 1 மார்ச் 1976-இல் கோத்தா ஸ்டார் மாவட்ட ஊராட்சியாக (Kota Setar District Council) தரம் உயர்த்தப்பட்டது.[2] மீண்டும் 1 பிப்ரவரி 1978-இல் கோத்தா ஸ்டார் நகராட்சி மன்றமாக (Kota Setar Municipal Council) தரம் உயர்த்தப்பட்டது. இறுதியாக 21 டிசம்பர் 2003-இல் அலோர் ஸ்டார் மாநகராட்சியாக (Alor Star City Council) தகுதி உயர்த்தப்பட்டது.<ref name="Sanitary Board"> அலோர் ஸ்டார் நகரம் 31 டிசம்பர் 1735-இல் நிறுவப்பட்டது. இதன் மூலம், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள பழமையான நகரங்களில் அலோர் ஸ்டார் மாநகரமும் ஒன்று என அறியப்பட்டுகிறது. அலோர் ஸ்டார் நகராட்சி முதல்வர்கள்
அலோர் ஸ்டார் மாநகராட்சி முதல்வர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia