கூச்சிங் வடக்கு மாநகராட்சி
கூச்சிங் வடக்கு மாநகராட்சி அல்லது கூச்சிங் வடக்கு மாநகராட்சி வாரியம் (மலாய்: Suruhanjaya Dewan Bandaraya Kuching Utara; ஆங்கிலம்: Commission of Kuching North City Hall); (சுருக்கம்: DBKU) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில், கூச்சிங் பிரிவு; கூச்சிங் மாவட்டம்; கூச்சிங் மாநகரத்தின் வடக்குப் பகுதியை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் சரவாக் மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது. கூச்சிங் வடக்குப் பகுதியின் மாநகராட்சி ஓர் ஆணையத்தின் கீழ் செயல் படுகிறது. அதனை கூச்சிங் வடக்குப் பகுதியின் மாநகராட்சி ஆணையம் (Commission of Kuching North City Hall) என்று அழைக்கப்படுகிறது. 1 ஆகஸ்டு 1988-இல் கூச்சிங் நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி ஆணையம் நிறுவப்பட்டது. கூச்சிங் வடக்குப் பகுதி மாநகராட்சியின் அதிகார வரம்பு 369.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] 1993-ஆம் ஆண்டு, கூச்சிங் வடக்குப் பகுதியின் மாநகராட்சி மண்டபம் நகர மையத்திலிருந்து வடக்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.. இந்த மண்டபத்திற்குள் உள்ளூராட்சி மன்றம்; மற்றும் அதன் தரைத் தளத்தில் பூனை அருங்காட்சியகமும் உள்ளன.[1] பொதுகூச்சிங் மாநகராட்சி முதல்வரும்; ஒன்பது கூச்சிங் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு, சரவாக் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப் படுகின்றனர். இந்த மாநகராட்சியின் நோக்கம்; கூச்சிங் மாநகரத்தின் வடக்குப் பகுதியின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[2]. பொதுகூச்சிங் வாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று கூச்சிங் நகரை, மாநகரத் தகுதிக்கு உயர்த்த விண்ணப்பம் செய்யப்பட்டது. கூச்சிங் பேரூராட்சி மன்றத் தலைவர், மாநில உள்ளாட்சிப் பொறுப்பு அமைச்சரிடம், அதற்கான மனுவை வழங்கினார். 18 சூலை 1984 அன்று சரவாக் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனு மற்றும் தீர்மானம் ஆகிய இரண்டிற்கும் சரவாக் ஆளுநர் அக்டோபர் 1985-இல் ஒப்புதல் வழங்கினா.[3] அதன் பிறகு அந்த இரண்டு மனுக்களும் மலேசியப் பிரதமரின் மூலமாக மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டன. 3 ஜூலை 1986 அன்று மலாய் ஆட்சியாளர்கள் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டனர்.[3] சில நடைமுறைகள் மற்றும் முன்விதிளை நிறைவு செய்த பின்னர் 1 ஆகஸ்டு 1988-இல், கூச்சிங் நகரம் அதிகாரப்பூர்வமாக ஒரு மாநகரமாகத் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கூச்சிங் நகரம், வடக்கு கூச்சிங் மற்றும் தெற்கு கூச்சிங் என 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது: கூச்சிங் வடக்குப் பகுதி ஓர் ஆணையரால் நிர்வகிக்கப்படுகிறது; கூச்சிங் தெற்குப் பகுதி ஒரு மேயரால் நிர்வகிக்கப்படுகிறது. வரலாறுசரவாக்கில் வெள்ளை இராஜா அரசாங்கத்தின் போது பொதுப்பணித் துறையால் கையாளப்பட்ட மன்றத்தின் பல செயல்பாடுகள் இன்றும் இந்தக் கூச்சிங் மாநகராட்சிகளின் பயன்பாடுகளில் உள்ளன. ஜேம்சு புரூக் (Sir James Brooke); போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர். அதன் முதல் ராஜாவாக ஆட்சி செய்தவர். இவரின் ஆட்சிக் காலத்தில் தான் ஊராட்சித் திட்டங்கள் அமலுக்கு வந்தன.[4][5] 1921-இல் கூச்சிங் பொதுத் தூய்மை மற்றும் நகராட்சி ஆலோசனைக் குழு (Kuching Sanitary and Municipal Advisory Board) உருவாக்கப்பட்டது. ஒரு புதிய சட்டத்தைத் தொடர்ந்து, அந்த வாரியம் 1 ஜனவரி 1934-இல் கூச்சிங்கிற்கான நகராட்சி ஆணையமாக (Municipal Authority Kuching) மாறியது. பின்னர் கூச்சிங் நகராட்சி வாரியம் என்று அழைக்கப்பட்டது (Kuching Municipal Board). இரு பகுதிகளாக கூச்சிங்1986 ஜூலை 3-ஆம் தேதி, தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. 1988 ஆகஸ்டு 1-ஆம் தேதி, கூச்சிங் நகரம் அதிகாரப்பூர்வமாக ஒரு மாநகரமாகச் செயல்படத் தொடங்கியது. கூச்சிங் மாநகரம் வடக்கு மற்றும் தெற்கு என 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கூச்சிங் வடக்கிற்கு ஆணையர் (Commissioner); கூச்சிங் தெற்கிற்கு மேயர் (Mayor) என இரு மாநகர்த் தலைவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது. கூச்சிங் தெற்குப் பகுதி (Kuching City South) பெரும்பாலும், முன்பு இருந்த கூச்சிங் முனிசிபல் மன்றத்தின் (Kuching Municipal Council - KMC) கீழ் இருந்த பகுதிகளை உள்ளடக்கியது. கூச்சிங் வடக்குப் பகுதிகூச்சிங் வடக்குப் பகுதி (Kuching City North) முன்பு இருந்த கூச்சிங் கிராமப்புற மாவட்ட மன்றத்தால் (Kuching Rural District Council - KRDC) நிர்வகிக்கப்பட்ட பிரதேசத்தின் குறிப்பிடத்தக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கூச்சிங் வடக்குப் பகுதி ஓர் ஆணையரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவருக்கு ஓர் ஆலோசகர் குழு (Board of Advisors) உதவுகிறது. மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia