கூச்சிங் தெற்கு மாநகராட்சி
கூச்சிங் தெற்கு மாநகராட்சி அல்லது கூச்சிங் தெற்கு மாநகராட்சி மன்றம் (மலாய்: Majlis Bandaraya Kuching Selatan; ஆங்கிலம்: Council of the City of Kuching South); (சுருக்கம்: MBKS) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில், கூச்சிங் பிரிவு; கூச்சிங் மாவட்டம்; கூச்சிங் மாநகரத்தின் தெற்குப் பகுதியை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சரவாக் மாநில அரசாங்க அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது. 1998 ஆகஸ்டு 1-ஆம் தேதி கூச்சிங் நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு கூச்சிங் தெற்கு மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 61.53 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது. பொதுகூச்சிங் தெற்கு மாநகராட்சி முதல்வரும்; கூச்சிங் தெற்கு மாநகராட்சி துணை முதல்வரும்; 30 கூச்சிங் தெற்கு மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஈராண்டு காலம் பணியாற்றுவதற்கு, சரவாக் மாநில அரசாங்கத்தால் (Sarawak State Government) நியமிக்கப் படுகின்றனர். மன்ற உறுப்பினர்கள் சரவாக் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளைச் (Gabungan Parti Sarawak) சார்ந்தவர்களாக உள்ளனர். இந்தக் கூச்சிங் தெற்கு மாநகராட்சியின் நோக்கம்; கூச்சிங் மாநகரத்தின் தெற்குப் பகுதியின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், மாநகராட்சியின் கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[1]. வரலாறுசரவாக்கில் வெள்ளை இராஜா அரசாங்கத்தின் போது பொதுப்பணித் துறையால் கையாளப்பட்ட மன்றத்தின் பல செயல்பாடுகள் இன்றும் இந்தக் கூச்சிங் மாநகராட்சிகளின் பயன்பாடுகளில் உள்ளன. ஜேம்சு புரூக் (Sir James Brooke); போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர். அதன் முதல் ராஜாவாக ஆட்சி செய்தவர். இவரின் ஆட்சிக் காலத்தில் தான் ஊராட்சித் திட்டங்கள் அமலுக்கு வந்தன.[2][3] 1921-இல் கூச்சிங் பொதுத் தூய்மை மற்றும் நகராட்சி ஆலோசனைக் குழு (Kuching Sanitary and Municipal Advisory Board) உருவாக்கப்பட்டது. ஒரு புதிய சட்டத்தைத் தொடர்ந்து, அந்த வாரியம் 1 ஜனவரி 1934-இல் கூச்சிங்கிற்கான நகராட்சி ஆணையமாக (Municipal Authority Kuching) மாறியது. பின்னர் கூச்சிங் நகராட்சி வாரியம் என்று அழைக்கப்பட்டது (Kuching Municipal Board). கூச்சிங்கிற்கு மாநகரத் தகுதிகூச்சிங்கை நகரத் தகுதிக்கு உயர்த்துவதற்கான விண்ணப்பம் கூச்சிங் வாழ் மக்களின் விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது. 18 ஜூலை 1984-இல் சரவாக் சட்ட மன்றத்தில் (Dewan Undangan Negeri Sarawak) அதற்குரிய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு 1985-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், யாங் டி பெர்துவா சரவாக் ஒப்புதல் வழங்கினார். அதன்பிறகு, அந்தத் தீர்மானம் ஆட்சியாளர்கள் மாநாட்டின் (Conference of Rulers) பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. கூச்சிங் இரு பகுதிப் பிரிவுகள்1986 ஜூலை 3-ஆம் தேதி, தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. 1988 ஆகஸ்டு 1-ஆம் தேதி, கூச்சிங் நகரம் அதிகாரப்பூர்வமாக ஒரு மாநகரமாகச் செயல்படத் தொடங்கியது. கூச்சிங் மாநகரம் வடக்கு மற்றும் தெற்கு என 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கூச்சிங் வடக்கிற்கு ஆணையர் (Commissioner); கூச்சிங் தெற்கிற்கு மேயர் (Mayor) என இரு மாநகர்த் தலைவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது. கூச்சிங் வடக்குப் பகுதிகூச்சிங் வடக்குப் பகுதி (Kuching City North) முன்பு இருந்த கூச்சிங் கிராமப்புற மாவட்ட மன்றத்தால் (Kuching Rural District Council - KRDC) நிர்வகிக்கப்பட்ட பிரதேசத்தின் குறிப்பிடத்தக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கூச்சிங் வடக்குப் பகுதி ஓர் ஆணையரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவருக்கு ஓர் ஆலோசகர் குழு (Board of Advisors) உதவுகிறது. கூச்சிங் தெற்குப் பகுதிகூச்சிங் தெற்குப் பகுதி (Kuching City South) பெரும்பாலும், முன்பு இருந்த கூச்சிங் முனிசிபல் மன்றத்தின் (Kuching Municipal Council - KMC) கீழ் இருந்த பகுதிகளை உள்ளடக்கியது. கூச்சிங் தெற்கு மாநகராட்சி முதல்வர்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia