1994 சனவரி 1-ஆம் தேதி சொகூர் பாரு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு சொகூர் பாரு மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், சொகூர் பாரு மாநகரத்தில் உள்ளது.
பொது
இந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம்(Public Health);கழிவு மேலாண்மை(Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[1]
வளர்ச்சிப் படிகள்
ஜொகூர் பாரு நகரக் கழகம் (மலாய்: Lembaga Bandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Town Board); 1910;
ஜொகூர் பாரு நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Town Council); 1952;
ஜொகூர் பாரு நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Municipal Council);1 ஏப்ரல் 1977;
ஜொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); 1 சனவரி 1994 தொடக்கம்;[2]
↑Carol Murugiah, JB–the tropical garden city: Reowned as shopper's haven with new malls, pg 4, 8 April 2001, New Sunday Times Special (Sultan of Johor's Birthday)