சிரம்பான் மாநகராட்சி Seremban City Council Majlis Bandaraya Seremban
சிரம்பான் மாநகராட்சி சின்னம்
வகை
வகை
மாநகர் மன்றம்
வரலாறு
தோற்றுவிப்பு
1897
முன்பு
1. பொதுத் தூய்மைக் கழகம் (Sanitary Board) 2. சிரம்பான் நகராட்சி (Seremban Town Council)
தலைமை
நகர முதல்வர்
மசுரி ரசாலின் Dato' Masri bin Razali 23 சூலை 2021
கூடும் இடம்
சிரம்பான் மாநகராட்சி தலைமையகம் Majlis Bandaraya Seremban, Wisma MBS, Persiaran Forest Heights 1, Jalan Seremban-Tampin 70450 Seremban, Negeri Sembilan சிரம்பான், நெகிரி செம்பிலான்
சிரம்பான் பொதுத் தூய்மைக் கழகம் (மலாய்: Lembaga Kesihatan Seremban; ஆங்கிலம்: Seremban Sanitary Board); 1897;
சிரம்பான் நகரக் கழகம் (மலாய்: Lembaga Bandaran Seremban; ஆங்கிலம்: Seremban Town Board); 1946;
சிரம்பான் நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Seremban; ஆங்கிலம்: Seremban Town Council); 1953;
சிரம்பான் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Seremban; ஆங்கிலம்: Seremban Municipal Council); 1 மார்ச் 1979;
சிரம்பான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Seremban; ஆங்கிலம்: Seremban City Council); 1 சனவரி 2020 தொடக்கம்;[3][4]
பொது
சிரம்பான் மாநகராட்சி முதல்வரும்; சிரம்பான் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப் படுகின்றனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; சிரம்பான் மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[5].
அமைவு
சிரம்பான் மாநகராட்சி, சிரம்பான் மாவட்டத்தை முழுவதுமாக உள்ளடக்கியது. அதன் எல்லைகளாக உள்ள இடங்கள்:
சிரம்பான் மாநகராட்சிக்குள் சிரம்பான் மாவட்டம் அமைந்து உள்ளது.
அந்த வகையில் 19 தமிழ்ப்பள்ளிகள் சிரம்பான் மாநகராட்சியின் கவனிப்பில் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]