1941-இல் பிரித்தானிய பேரரசின் படைகளின் தளபதியாக சிங்கப்பூருக்கு விமானம் மூலம் பெர்சிவல் வந்த போது எடுத்த படம்
ஆர்தர் பெர்சிவல் அல்லது ஆர்தர் எர்னஸ்ட் பெர்சிவல் (ஆங்கிலம்; மலாய்: Arthur Ernest Percival; சீனம்: 白思华); (26 டிசம்பர் 1887 – 31 சனவரி 1966) என்பவர் மூத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா பிரித்தானிய இராணுவத்தின் தளபதி;[1][2] மற்றும் சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருந்த மலாயா பிரித்தானிய இராணுவத்தின் 85,000 நேச நாட்டுப் போர் வீரர்களுக்கும் தளபதியாகப் பொறுப்பு வகித்தவர்.
இரண்டாம் உலகப் போரில் சப்பானிய இராணுவப் படையிடம் பிரித்தானியப் பேரரசு சரண் அடைந்ததற்கு ஆர்தர் பெர்சிவல் மட்டும் காரணம் அல்ல என்று சர் ஜோன் ஸ்மித் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.[5]
மலாயாவின் பாதுகாப்புக்கு பிரித்தானியப் பேரரசு குறைவான நிதியை ஒதுக்கீடு செய்தது; சிங்கப்பூரில் இருந்த பிரித்தானிய இராணுவத் தலைமைத்துவம், போர் முனைகளுக்கு குறைவான ஆயுதங்களை வழங்கியது போன்றவை முக்கியமான காரணங்கள் என்றும்; ஆர்தர் பெர்சிவலின் தலைமைத்துவத்தைக் குற்றம் சாட்டுவது சரியன்று என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கை
ஆர்தர் பெர்சிவல் 1887-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி இங்கிலாந்து, ஆசுபென்டன், ஆர்ட்போர்ட்சயர் எனும் இடத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் ஆல்பிரட் ரெஜினால்ட்; தாயார் பெயர் எடித் பெர்சிவல்; குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[6]
பள்ளியில் இவர் ஒரு மிதமான மாணவர்; கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளைப் படித்தவர். ஆனால் பள்ளிப்படிப்பில் சிறந்த மாணவர் அல்ல என்று அறியப்படுகிறார்.[7] 1906-இல் உயர்நிலைப்படிப்பை முடித்த போது, அவர் சிறந்த ஒரு விளையாட்டு வீரராக இருந்தார்.[8]
பெர்சிவல் 26 வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். 1915-ஆம் ஆண்டில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.[6][9]}} 1920-ஆம் ஆண்டில், அயர்லாந்து சுதந்திரப் போரின் போது அயர்லாந்து குடியரசு இராணுவத்திற்கு எதிராகப் போராடினார். மார்ச் 1936-இல் பெர்சிவல் கர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.[10][11]
மலாயா போர்கள்
ஏப்ரல் 1941-இல் மலாயாவில் பிரித்தானிய இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[12][13] சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருந்த மலாயா பிரித்தானிய இராணுவத்தின் 85,000 நேச நாட்டுப் படைகளுக்குத் தலைமை தாங்கினார்.
சப்பானியப் படைகளுக்கு எதிராக பிரித்தானிய கூட்டுப் படையினர் பாலங்களைத் தகர்க்க வெடிமருந்துகளைப் பொருத்தும் போது எடுத்த படம் சப்பானியர்களிடம் சரண் அடையும் போது வெள்ளைக் கொடியுடன் ஆர்தர் பெர்சிவல்
சிங்கப்பூர் போர் தொடங்கியதில் இருந்து, ஆர்தர் பெர்சிவலிடம் சப்பானிய தளபதி தோமோயுகி யமாசிதா நிபந்தனையற்ற சரணடைதலைக் கோரி வந்தார். இறுதியில், 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி பிற்பகலில், பெர்சிவல் சரண் அடைந்தார். சுமார் 80,000 பிரித்தானிய, இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் உள்ளூர் வீரர்கள் போர்க் கைதிகளாக ஆனார்கள்.
அந்த நிகழ்வில், முன்னாள் சப்பானியப் படைகளின் தளபதி தோமோயுகி யமாசிதா, பெர்சிவாலைப் பார்த்து, ஆச்சரியப்பட்டார். யமாசிதாவுடன் கைகுலுக்க பெர்சிவல் மறுத்துவிட்டார். சிங்கப்பூரில் தம்முடைய போர்க் கைதிகள் மோசமாக நடத்தப்பட்டதால் பெர்சிவல் கோபத்தில் இருந்தார்.[20]
↑"No. 29824". இலண்டன் கசெட் (Supplement). 14 November 1916. p. 11063.
↑"No. 30901". இலண்டன் கசெட் (Supplement). 13 September 1918. p. 10871.
↑"No. 31745". இலண்டன் கசெட் (Supplement). 20 January 1920. p. 923.
↑"No. 32231". இலண்டன் கசெட் (Supplement). 15 February 1921. p. 1361.
↑"No. 35204". இலண்டன் கசெட் (Supplement). 1 July 1941. p. 3736.
↑"No. 39412". இலண்டன் கசெட் (Supplement). 18 December 1951. p. 6600.
நூல்கள்
Barry, Tom, Guerilla Days in Ireland, Dublin, 1949
Bose, Romen, "Secrets of the Battlebox: The role and history of Britain's Command HQ during the Malayan Campaign", Marshall Cavendish, Singapore, 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-9814328548
Hack, Karl and Blackburn, Kevin, Did Singapore Have to Fall?: Churchill and the Impregnable Fortress, Routledge Curzon, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-415-30803-8
Kinvig, Clifford, General Percival and the Fall of Singapore, in 60 Years On: the Fall of Singapore Revisited, Eastern University Press, Singapore, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-9812102027
Percival, Arthur Ernest The War in Malaya, London, Eyre & Spottiswoode, 1949. Extracts from the report used as the basis of this book are at [1] accessed 2 February 2006 and the references here are to this report