இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு (Strontium stearate) C36H70SrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[3]இசுட்ரோன்சியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[4]
தயாரிப்பு
இசுட்ரோன்சியம் ஐதராக்சைடுடன் சிடீயரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு உருவாகிறது.[5]
இயற்பியல் பண்புகள்
வெண்மை நிற தூளாக இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு உருவாகிறது. ஆல்ககாலில் இது கரையாது. ஆனால் அலிபாட்டிக் மற்றும் அரோமாட்டிக் கரைப்பான்களில் கரையும்.[6]
பயன்கள்
உயவு எண்ணெய் மற்றும் மெழுகு உற்பத்தியில் இது பயன்படுத்தப்படுகிறது. [6][7]
பாலி ஒலிபீன் பிசின்களின் ஓட்டும் பண்புகளை மேம்படுத்த இது ஒரு மசகு எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது.[6][8]