இசுட்ரோன்சியம் போரைடு (Strontium hexaboride) என்பது SrB6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இசுட்ரோன்சியம் அறுபோரைடு, இசுட்ரோன்சியம் எக்சாபோரைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. அறை வெப்பநிலையில், இது ஒரு படிகக் கருப்பு தூளாகத் தோன்றுகிறது.[1] நெருக்கமான பரிசோதனையில் குவார்ட்சின் மீது கீறலை ஏற்படுத்தக் கூடிய திறன் கொண்ட சற்றே ஒளி ஊடுருவக்கூடிய அடர் சிவப்பு படிகங்களாகத் தோன்றும்.[2] அதிக நிலைப்புத்தன்மையும், அதிக உருகுநிலை மற்றும் அடர்த்தியும் கொண்டுள்ளது. நச்சுத்தன்மை வாய்ந்ததாக கருதப்படாவிட்டாலும், இது தோல், கண்கள் மற்றும் சுவாசக்குழாய் ஆகியவற்றிற்கு எரிச்சலூட்டும்.[1]
காந்தவியல்
இசுட்ரோன்சியம் போரைடு, மற்ற காரமண் உலோக போரைடுகளுடன் சேர்ந்து குறைந்த வெப்பநிலையில் பலவீனமான ஃபெரோ காந்தத்தன்மையை வெளிப்படுத்துகிறது.[3] படிக அணிக்கோவையில் உள்ள சிறிய அசுத்தங்கள் அல்லது பிறழ்வுகளால் இப்பண்பு ஏற்படுவதாக சிலரால் கருதப்படுகிறது.[4][5] மற்றவர்கள் வெவ்வேறு விளக்கங்கள் தேவை என்று பரிந்துரைக்கின்றனர்.[6] இசுட்ரோன்சியம் போரைடு குறைந்த வெப்பநிலையில் குறைக்கடத்தி பண்புகளுக்காகவும் ஆய்வு செய்யப்பட்டது.[7]
தயாரிப்பு
இசுட்ரோன்சியம் போரேட்டு, அலுமினியம் மற்றும் கார்பன் ஆகியவற்றை மின்சார உலையில் கலந்து வினைபுரியச் செய்து இசுட்ரான்சியம் போரைடை தயாரித்ததாக என்றி மொய்சன் தனது தி எலக்ட்ரிக் பர்னசு என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.[2] மாற்றாக, திண்மநிலை இசுட்ரான்சியம் போரைடை இரண்டு மோல் இசுட்ரோன்சியம் கார்பனேட்டையும் மூன்று மோல் போரான் கார்பைடையும், ஒரு மோல் கார்பனுடன் வெற்றிட உலைக்குள் இட்டு வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம்.[8]
பயன்கள்
இசுட்ரோன்சியம் போரைடு மின்காப்பு மற்றும் அணுக்கட்டுப்பாட்டு கம்பிகளில் பயன்படுத்தப்படுகிறது.[8] விமானத்தின் சன்னல்களுக்கான சமீபத்திய காப்புரிமை SrB6 நானோ துகள்களை ஓர் ஒளியூடுறுவும் அக்ரைலிக் தாளில் பயன்படுத்துகிறது.இந்த நானோ துகள்களின் அகச்சிவப்பு -உறிஞ்சும் பண்புகள் அகச்சிவப்பு அலைநீளங்களை கடத்துவதைத் தடுக்கிறது. அதே நேரத்தில் இது புலப்படும் ஒளியின் கடத்தலை அனுமதிக்கிறது.[9]
↑Shang, S.; Liu, Z. (2007). "Thermodynamics of the B–Ca, B–Sr, and B–Ba systems: Applications for the fabrications of CaB6, SrB6, and BaB6 thin films". Applied Physics Letters90 (9): 091914. doi:10.1063/1.2710081. Bibcode: 2007ApPhL..90i1914S.
↑Dorneles, L.; Venkatesan, M.; Moliner, M.; Lunney, J.; Coey, J. (2004). "Magnetism in thin films of CaB6 and SrB6". Applied Physics Letters85 (26): 6377–6379. doi:10.1063/1.1840113. Bibcode: 2004ApPhL..85.6377D.
↑Ott, H. R.; Chernikov, M.; Felder, E.; Degiorgi, L.; Moshopoulou, E. G.; Sarrao, J. L.; Fisk, Z. (1997). "Structure and low temperature properties of SrB6". Z. Phys. B102 (3): 337–345. doi:10.1007/s002570050297. Bibcode: 1997ZPhyB.102..337O.
↑ 8.08.1Zheng, Shu-Qi; Zou, Zeng-Da; Min, Guang-Hui; Yu, Hua-Shun; Han, Jian-De; Wang, Wei-Ti. "Synthesis of strontium hexaboride powder by the reaction of strontium carbonate with boron carbide and carbon". Journal of Materials Science Letters2002 (21): 313–315.