இசுட்ரோன்சியம் செலினேட்டுடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து 600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இசுட்ரோன்சியம் செலீனைடை தயாரிக்கலாம்.[2] நீர்ம அம்மோனியாவில் இசுட்ரோன்சியத்தையும் ஐதரசன் செலீனைடையும் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்க இயலும்.[3]
பண்புகள்
இசுட்ரோன்சியம் செலீனைடு செஞ்சாய்சதுர படிக அமைப்பில் Fm3m என்ற இடக்குழுவுடன் படிகமாக்குகிறது. மேலும், இது NaCl அமைப்பைக் கொண்டுள்ளது.[4][5] உயர் அழுத்தத்தின் கீழ் (14 கிகாபாசுக்கல்) இடக்குழு Pm3m உடன் CsCl கட்டமைப்பாக மாறுகிறது.[6]
இசுட்ரோன்சியம் செலீனைடு அதிக வெப்பநிலையில் பாதரச செலீனைடு மற்றும் செருமேனியம் இருசெலீனைடு ஆகியவற்றுடன் வினைபுரிந்து SrHgGeSe4 படிகத்தைக் கொடுக்கிறது.[7] இசுட்ரோன்சியம் செலீனைடு வெள்ளீயத்தின் முன்னிலையில் அதிக வெப்பநிலையில் தோரியம் மற்றும் செலினியத்துடன் வினைபுரிந்து SrTh2Se5 சேர்மத்தைக் கொடுக்கிறது.[8]
↑Диаграммы состояния двойных металлических систем. Vol. 3 Книга 2. М.: Машиностроение. 2000. ISBN5-217-02932-3. {{cite book}}: Unknown parameter |agency= ignored (help)
↑Predel, B. (1998), Madelung, O. (ed.), "Se-Sr (Selenium-Strontium)", Pu-Re – Zn-Zr, Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்), vol. 5 J (Landolt-Börnstein - Group IV Physical Chemistry ed.), Berlin/Heidelberg: Springer-Verlag, p. 1, doi:10.1007/10551312_2714, ISBN978-3-540-61742-6, retrieved 2023-07-07