இசுட்ரோன்சியம் புளோரைடு
இசுட்ரோன்சியம் புளோரைடு (Strontium fluoride) என்பது SrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இசுட்ரோன்சியம்(II) புளோரைடு , இசுட்ரோன்சியம் இருபுளோரைடு, இசுட்ரோன்சியம் டைபுளோரைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. இசுட்ரோன்சியத்தின் புளோரைடு உப்பான இது நொறுங்கக் கூடியதாகவும் வெண்மையான படிகத் திண்மமாகவும் காணப்படுகிறது. இயற்கையில் இசுட்ரோன்சியோபுளோரைட்டு கனிமம் போன்ற தோற்றத்தில் இக்கனிமம் காணப்படுகிறது.[2][3] தயாரிப்புஐதரோபுளோரிக் அமிலத்துடன் இசுட்ரோன்சியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து இசுட்ரோன்சியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[4] கட்டமைப்புஇசுட்ரோன்சியம் புளோரைடு புளோரைட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. வாயு நிலையில் SrF2 என்ற இம்மூலக்கூறு நேரியல் அல்லாத அமைப்புடன் F−Sr−F கோணம் தோராயமாக 120° அளவைக் கொண்டுள்ளது.[5] இணைதிறன் கூடு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கைக்கு கோட்பாட்டிற்கு இது விதிவிலக்காகும். ஏனெனில் இக்கொள்கை ஒரு நேரியல் கட்டமைப்பைக் கணிக்கும். இணைதிறன் கூட்டுக்கு கீழே உள்ள கூட்டில் உள்ள d ஆர்பிட்டால்களின் பங்களிப்புகள் பொறுப்பு என்று முன்மொழிவதற்கு தொடக்க நிலை கணக்கீடுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.[6] மற்றொரு முன்மொழிவு என்னவென்றால், இசுட்ரோன்சியம் அணுவின் எலக்ட்ரான் மையத்தின் முனைப்புத்திறன் Sr−F பிணைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் தோராயமான மின்னழுத்த விநியோகத்தை உருவாக்குகிறது.[7] பண்புகள்இசுட்ரோன்சியம் புளோரைடு கிட்டத்தட்ட நீரில் கரையாது. 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் கரைதிறன் சமநிலை அளவு (Ksp) தோராயமாக 2.0x10−10 ஆகும். கண்கள் மற்றும் தோலில் இசுட்ரோன்சியம் புளோரைடு எரிச்சலூட்டும். உள்ளிழுக்கும் போது அல்லது உட்கொள்ளும்போது தீங்கு விளைவிக்கும். CaF2 மற்றும் BaF2 சேர்மங்கள் போன்றே, SrF2 உயர்ந்த வெப்பநிலையில் மீ அயன கடத்துத்திறனைக் காட்டுகிறது.[8] இசுட்ரோன்சியம் புளோரைடு வெற்றிட புற ஊதா (150 nm) முதல் அகச்சிவப்பு (11 μm) வரையிலான அலைநீளங்களில் ஒளி புகும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் ஒளியியல் பண்புகள் கால்சியம் புளோரைடு மற்றும் பேரியம் புளோரைடு ஆகியற்றுக்கு இடைநிலையில் உள்ளன.[9] பயன்கள்இசுட்ரோன்சியம் புளோரைடு ஒரு சிறிய அளவிலான சிறப்புப் பயன்பாடுகளுக்கு ஒளியியல் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வில்லைகள் மீது ஒளியியல் பூச்சு போன்ற பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்க ஐசோடோப் வெப்பமின் உற்பத்தி இயந்திரங்களில் கதிரியக்க ஐசோடோப்பு கடத்தியாக இசுட்ரோன்சியம் -90 பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia