இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு
இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு (Strontium barium niobate) என்பது SrxBa1-xNb2O6 அமைப்பிற்காக 0.32≤x≤0.82. கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும்[1]. இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு ஒரு பெர்ரோ மின்னிய வேதிப்பொருளாகும். பொதுவாக ஒளிவிலகல் பண்புகளால் இது, ஒற்றைப் படிக அமைப்பில் மின்பொறி-ஒளியியல், ஒலி-ஒளியியல், ஒருபரிமாண- ஒளியியல் போன்ற பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆவியாகும் பொருள்களில்லாத நான்முக தங்குதன் வெண்கலச் சேர்மங்கள் சிலவற்றில் இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டும் ஒன்றாகும். எனவே கட்டமைப்பு தொடர்புகள் ஆய்வுக்கு இது பெரிதும் உதவுகிறது[3] . இயைபில் அதிக அளவு பேரியம் கொண்டவற்றுக்கு இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு ஒரு சாதாரண பெர்ரோமின்னிய பொருளாகும். இதை இசுட்ரோன்சியம் மிகை பெர்ரோமின்னியப் பொருளாக மாற்றமுடியும். ஏ-தள நேர்மின் அயனிகளின் அமைப்பு பிறழ்வும்[4], அருகில் அளவுப் பொருத்தமற்ற எண்முக ஆக்சிசன் சரிவும் இயல்புக் குணங்களாயின[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia